LATEST NEWS
FLASH: மூத்த IAS அதிகாரி சிவ்தாஸ் மீனா திடீர் ராஜினாமா…! பெரும் பரபரப்பு..!!
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராகப் பதவி வகித்து வந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரியான சிவ்தாஸ் மீனா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரைத் தொடர்ந்து, இந்த ஆணையத்தின் உறுப்பினர்களாக இருந்த சுப்பிரமணியம் மற்றும் சுகுமார் ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
ஏற்கனவே சங்கர் ஜிவால், அபய் குமார் சிங் மற்றும் சுனில் குமார் உள்ளிட்ட பிற மூத்த அதிகாரிகள் தங்களது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர். இந்தத் தொடர் விலகல்களின் பின்னணியில், தற்போது நிகழ்ந்துள்ள சிவ்தாஸ் மீனாவின் ராஜினாமாவானது அடுத்தக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
