LATEST NEWS
“செருப்பை கழட்டி அடித்து” பைக்கரிடம் வம்பு இழுத்த சிறுவன்… அடுத்த நொடியே நடந்த அந்த ‘பகீர்’ சம்பவம்.. நெட்டிசன்களை அதிரவைத்த வீடியோ..!
வங்காளதேசத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் பில்லா வாவ் (Billah Vau) தனது மோட்டார் சைக்கிளில் கிராமப்புறப் பகுதியில் பயணித்தபோது எடுத்த 12 நிமிட வீடியோவின் ஒரு பகுதி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அவர் சாலையோரம் நின்றபோது ஒரு சிறுவர்கள் குழு அவரைச் சூழ்ந்து கொள்கிறது. தொடக்கத்தில் அவர்கள் தங்களை ரசிகர்களாக அறிமுகப்படுத்திக் கொண்டு அவரிடம் மிகவும் நட்பாகப் பேசுகின்றனர்.
ஆனால், அந்த நட்புரீதியான உரையாடல் சிறிது நேரத்திலேயே வாக்குவாதமாக மாறுகிறது. அச்சிறுவர்கள் அந்த பைக்கரிடம் பணம் கேட்டு நச்சரிக்கத் தொடங்கியதோடு, ஒரு சிறுவன் பைக்கின் சாவியையும் பிடுங்கியுள்ளான். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. அர்ஜென்டினா ஜெர்சி மற்றும் ஆரஞ்சு நிற கால்சட்டை அணிந்திருந்த ஒரு சிறுவன், பைக்கரை மீண்டும் மீண்டும் தள்ளிவிட்டு கோபத்தை வெளிப்படுத்தினான். ஒருகட்டத்தில் தனது காலணியைக் கழற்றி அடிக்கப் போவது போலவும் மிரட்டினான். மற்ற சிறுவர்களும் பைக்கரை நோக்கிப் பாய்ந்தனர்.
https://twitter.com/heypriyanshere/status/2073658152495804811/video/1
நிலைமை கைமீறிப் போனதால் ஆத்திரமடைந்த அந்த பைக்கர், அந்தச் சிறுவனின் இரு கைகளையும் பிடித்து, சாலையோரம் இருந்த பசேல் என்ற புல்வெளி வயலுக்குள் தூக்கி வீசினார். அந்தச் சிறுவன் சரிவான பகுதியில் உருண்டு விழுந்தாலும், உடனடியாக எழுந்து நின்றான். எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்த 15 வினாடி வீடியோ சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து தீயாய் பரவி வருகிறது. இருப்பினும், இந்த முழு சம்பவமும் உண்மையானதா அல்லது சமூக வலைத்தள விளம்பரத்திற்காகத் திட்டமிட்டு நடிக்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்த வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சிலர் இந்தச் சம்பவத்தை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு, “இது இந்த ஆண்டின் மிகச் சிறந்த தூக்கி வீசுதல் என்றும், “இன்று நான் பார்த்ததிலேயே மிகவும் வேடிக்கையான விஷயம்” என்றும் பதிவிட்டுள்ளனர். அதே சமயம், மற்றொரு தரப்பினர் கவலை தெரிவித்து, “ஆண்களின் நகைச்சுவை என்பது வெறும் கொடுமைப்படுத்துதல் தானா? அந்தச் சிறுவனுக்குப் பலத்த காயம் ஏற்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்? இதற்கு அந்த பைக்கரைச் சிறையில் அடைக்க வேண்டும்” என்றும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
