இப்படியொரு மனுஷனா..? “கோமாவில் இருந்த பெண்ணுக்கு நிதியுதவி” முதலமைச்சர் விஜய் செஞ்ச அந்த உதவி.. உண்மையை உடைத்த புஸ்ஸி ஆனந்த்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இப்படியொரு மனுஷனா..? “கோமாவில் இருந்த பெண்ணுக்கு நிதியுதவி” முதலமைச்சர் விஜய் செஞ்ச அந்த உதவி.. உண்மையை உடைத்த புஸ்ஸி ஆனந்த்..!!

Published

on

கோமாவில் இருந்த பெண்ணிற்கு முதலமைச்சர் விஜய் நிதியுதவி வழங்கி உதவிய பழைய நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து, தவெக அமைச்சர் என். ஆனந்த் அண்மைய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார். சென்னையில் நிகழ்ந்த விபத்து ஒன்றில் சிக்கி, கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தப் பெண்ணின் முழு மருத்துவச் சிகிச்சைக்கான செலவுகளையும் முதலமைச்சர் விஜய் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கிக் காப்பாற்றியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சரின் இந்த அதிரடி நிதியுதவியால், அந்தப் பெண் வெறும் 15 நாட்களிலேயே குணமடைந்து மீண்டும் தனது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார். அதன் பின்னர், அந்தப் பெண் தனது திருமணத்திற்கு அழைப்பதற்காக வந்தபோது, அவரது அழைப்பை ஏற்று ஆந்திராவில் நடைபெற்று வந்த தனது திரைப்பட படப்பிடிப்பில் இருந்து நேராக வந்து அந்தப் பெண்ணை விஜய் வாழ்த்திவிட்டுச் சென்றதாக அமைச்சர் நெகிழ்ச்சியுடன் விவரித்துள்ளார். இந்த செய்தியானது முதலமைச்சரின் மனிதநேயத்தை வெளிப்படுத்திச் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in