LATEST NEWS
மின் ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! செல்போன் வாங்க ரூ.10,000 வழங்கும் தமிழக அரசு..!!
தமிழ்நாட்டில் மின்சார மீட்டர் ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் புதிய செல்போன் வாங்குவதற்காக ரூ.10,000 நிதியுதவி வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தத் தொகையுடன் சேர்த்து, மொபைல் ஆப் மூலம் ரீடிங் எடுக்கும் பணியாளர்களுக்கு சிUG சிம் கார்டும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செல்போனுக்கான நிதியுதவியானது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் குறிப்பிட்டுள்ளது.
தற்போது தமிழ்நாடு முழுவதும் மொத்தம் சுமார் 7,500 பேர் மின்சாரக் கணக்கீட்டாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களின் தினசரிப் பணிகளை டிஜிட்டல் மயமாக்கி, துரிதமாகச் செயல்படுத்துவதற்கு இந்த புதிய மொபைல் போன் மற்றும் சிம் கார்டு உதவித்தொகை திட்டம் வழிவகுக்கும்.
மின்சாரக் கணக்கீட்டாளர்களின் பணிச் சுமையைக் குறைக்கும் வகையிலேயே இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேனுவலாகப் பணிகளைச் செய்வதைத் தவிர்த்து, மொபைல் செயலி மூலம் எளிதாகவும் வேகமாகவும் ரீடிங் எடுக்க இந்தத் திட்டம் அவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.
