LATEST NEWS
FLASH:நாடு முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்..!!
2025-26 ஆம் கல்வியாண்டில் பல்வேறு காரணங்களுக்காக நாடு முழுவதும் மொத்தம் 58 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு தெரிவிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரம் மற்றும் பிற நிர்வாகக் காரணங்களை ஆய்வு செய்த பின், 2025-26 கல்வித் திட்டத்தின் கீழ் 58 பொறியியல் கல்லூரிகளை மூட AICTE அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மாணவர் சேர்க்கை குறைவு, போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை போன்ற பல்வேறு காரணங்களால் இந்த முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த பட்டியலில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா 12 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தில் 8 கல்லூரிகளும், தெலங்கானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் தலா 4 கல்லூரிகளும், ஆந்திரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தலா 3 கல்லூரிகளும் மூடப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளன.
நாடு தழுவிய இந்த மூடப்பட்ட கல்லூரிகளின் பட்டியலில், தென்னிந்தியாவின் முதன்மை மாநிலங்களில் ஒன்றான தமிழகமும் இடம்பெற்றுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் மொத்தம் 2 பொறியியல் கல்லூரிகள் இந்த கல்வியாண்டில் மூடப்பட்டுள்ளதாக AICTE-இன் அதிகாரப்பூர்வத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
