BREAKING: பயிர்கடன் தள்ளுபடி இல்லை…. விவசாயி உயிரிழப்பு… விஜய் அரசுக்கு சிக்கல்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: பயிர்கடன் தள்ளுபடி இல்லை…. விவசாயி உயிரிழப்பு… விஜய் அரசுக்கு சிக்கல்..!!!

Published

on

தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் ₹75,000 வரையிலான பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அண்மையில் அரசாணை வெளியிட்டிருந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் ₹75,000-க்கும் அதிகமாகக் கடன் பெற்ற விவசாயிகளுக்கு முழுமையான தள்ளுபடி கிடைக்காது என்பதால், நாகப்பட்டினம் மாவட்டம் பிரிஞ்சிமூலையைச் சேர்ந்த சோமு (67) என்ற கடைமடை விவசாயி தீவிர மன உளைச்சலுக்கு ஆளானார். அவர் கூட்டுறவு வங்கியில் ₹85,000 பயிர்க்கடன் பெற்றிருந்த நிலையில், கடன் தள்ளுபடி வரம்பை விட ₹10,000 கூடுதலாக இருந்ததால் அவரது கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படவில்லை

இதனால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் காரணமாக விவசாயி சோமு உயிரிழந்துள்ளார் என கடைமடை விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் தெரிவித்துள்ளது. கடன் தள்ளுபடி முழுமையாகக் கிடைக்காததால் நேரிட்ட இந்த விவசாயியின் மரணம், தமிழக அரசியல் வட்டாரத்திலும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, கடன் தள்ளுபடி விதிகளில் உள்ள இத்தகைய வரம்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் இதன் மூலம் எழுந்துள்ளன.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in