LATEST NEWS
கரூர் வழக்கில் திடீர் திருப்பம்!.. சாட்சிகளை கலைக்க முயற்சியா?.. முதலமைச்சர் விஜய்க்கு செக் வைத்த திமுக.. உச்ச நீதிமன்றம் எடுத்த அவசர முடிவு.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!
கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டு கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம், தற்போது டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தவெக முக்கிய நிர்வாகிகள் தற்போது முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசில் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவர்கள் தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்திச் சாட்சிகளைக் கலைக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சியான திமுக உச்ச நீதிமன்றத்தில் அதிரடி மனுத் தாக்கல் செய்துள்ளது. கோடைகால விடுமுறை அமர்வில் அவசர வழக்காக முறையிடப்பட்ட இந்த மனுவை, நாளை விசாரிப்பதாக நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த இடைக்கால மனுவில், கரூர் நெரிசல் வழக்கு குறித்துப் பொதுவெளியில் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் எவ்விதக் கருத்துக்களையும் தெரிவிக்கக் கூடாது என நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
தற்போதைய அமைச்சர்கள் சிலர் இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளதால், அவர்கள் அரசு மேடைகளைப் பயன்படுத்தி வழக்கின் விசாரணையைத் திசைதிருப்ப முயல்வதாக திமுக குற்றம் சாட்டியுள்ளதுடன், கடந்த ஜூலை 2 அன்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முந்தைய திமுக அரசு மீது அப்பட்டமாகப் பழிசுமத்திப் பேசியதையும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.மேலும், வரும் ஜூலை 10 அன்று முதலமைச்சர் விஜய் கரூர் பகுதிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு உதவிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளார். இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களே சிபிஐ விசாரணையின் முக்கியச் சாட்சிகளாக இருப்பதால், குற்றம் சாட்டப்பட்டவர்களே அரசு அதிகாரத்துடன் அவர்களை நேரடியாகச் சந்திப்பது சாட்சிகளை அச்சுறுத்துவதற்கும், ஆதாரங்களை மாற்றுவதற்கும் வழிவகுக்கும் என்று திமுக அச்சம் தெரிவித்துள்ளது. இந்த அவசர முறையீட்டை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அஹ்சானுதீன் அமானுல்லா மற்றும் ஷீல் நாகு ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு, வழக்கின் தீவிரத்தன்மையைக் கருதி நாளை இதைப் பட்டியலிட உத்தரவிட்டுள்ளது.
