LATEST NEWS
BREAKING: திமுகவில் இணைய ரூ.50 கோடி வரை பேரம்… ஆதாரத்தை வெளியிட்ட தவெக MLA..!!
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசை கவிழ்ப்பதற்காகத் தங்களை இழுக்கச் சிலர் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்.எல்.ஏ சரவணன் அதிரடியான மாபெரும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆளுங்கட்சியிலிருந்து தங்களை விலைக்கு வாங்கத் திட்டமிட்டு, திமுகவில் இணைவதற்காக தன்னிடம் ரூ.50 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்பொழுது தமிழக அரசியல் களத்தில் மிகப்பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பேரத்திற்குத் தான் எவ்விதத்திலும் ஒத்துக்கொள்ளாத காரணத்தால், மர்ம நபர்கள் சிலர் தன்னைத் தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் எம்.எல்.ஏ சரவணன் பரபரப்புக் குற்றச்சாட்டைப் பதிவு செய்துள்ளார். மேலும், வெறும் குற்றச்சாட்டோடு நிறுத்தாமல் தன்னிடம் திரைமறைவில் குதிரை பேரத்தில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் மற்றும் அவரோடு பேசிய ஆடியோ ஆதாரங்களையும் அவர் ஊடகங்கள் முன்னிலையில் வெளியிட்டுப் பரபரப்பைக் கூட்டியுள்ளார்.
ஏற்கனவே தவெக எம்.எல்.ஏ-க்களை இழுக்க முயன்றதாகச் சென்னை மற்றும் திருச்சியைச் சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் இதுவரை காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில், தற்போது மேலும் ஒரு எம்.எல்.ஏ ரூ.50 கோடி பேர ஆதாரத்தை வெளியிட்டிருப்பது ஆளும் தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே நேரடி மோதலை உருவாக்கியுள்ளது.
