LATEST NEWS
இபிஎஸ் எடுத்த திடீர் விஸ்வரூபம்..! “ஒருத்தரையும் விடமாட்டேன்” பாஜகவிடம் சிக்கிய பினாமி சொத்து ஆவணங்கள்… நடுக்கத்தில் தவெகவில் இணைந்த அதிமுக MLAக்கள்..!!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி , அண்மைய சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சியை விட்டு வெளியேறியவர்கள் மற்றும் உட்கட்சிக்குள் குடைச்சல் கொடுப்பவர்களுக்கு எதிராக அதிரடியான புதிய வியூகம் ஒன்றை வகுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளன. குறிப்பாக, அதிமுகவிலிருந்து விலகி ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் திமுகவுக்குத் தாவிய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளைக் குறிவைத்து இந்த ரகசியத் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த புதிய வியூகத்தின்படி, தவெக மற்றும் திமுகவுக்குச் சென்ற முன்னாள் அமைச்சர்கள் முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் பதவியில் இருந்தபோது செய்ததாகக் கூறப்படும் ஊழல் புகார்கள் மற்றும் அவர்களின் பினாமி சொத்துக்கள் குறித்த அத்தனை ஆவணங்களையும் எடப்பாடி பழனிசாமி தரப்பு திரட்டியுள்ளதாகத் தெரிகிறது. இந்த ரகசிய சொத்து ஆவணங்கள் மற்றும் முக்கிய கோப்புகளை டெல்லியிலுள்ள பாஜக மேலிட தலைமைக்கு அனுப்பி வைக்க இபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அமலாக்கத்துறை (ED), வருமான வரித்துறை (IT) மற்றும் சிபிஐ (CBI) போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் மூலம், கட்சி மாறிய முன்னாள் அமைச்சர்களுக்கு சட்ட ரீதியான குடைச்சல்களையும் நெருக்குதல்களையும் கொடுக்கவே இந்த டெல்லி அசைன்மென்ட் தயார் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கட்சி மாறிச் சென்றவர்கள் மீது ஊழல் தடுப்பு நடவடிக்கைகளை பாய்ச்சுவதன் மூலம், கட்சித் தாவல்களைத் தடுக்கவும், உட்கட்சி எதிர்ப்பாளர்களை ஒடுக்கவும் இபிஎஸ் இந்த அரசியல் அஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
