“நண்பனின் மனைவியுடன் கள்ள உறவு.. டாஸ்மாக்கில் வெடித்த தகராறு.. நண்பர்களை வைத்து கணவன் போட்ட பயங்கர ஸ்கெட்ச். ஈரோட்டை உலுக்கிய கள்ளக்காதல் விவகாரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“நண்பனின் மனைவியுடன் கள்ள உறவு.. டாஸ்மாக்கில் வெடித்த தகராறு.. நண்பர்களை வைத்து கணவன் போட்ட பயங்கர ஸ்கெட்ச். ஈரோட்டை உலுக்கிய கள்ளக்காதல் விவகாரம்..!!

Published

on

ஈரோடு மணல்மேடு பகுதியில் தேங்காய் வியாபாரி கோபிநாத் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு விவேக் என்ற நெருக்கிய நண்பர் உள்ளார். இந்நிலையில் கோபிநாத் அடிக்கடி நண்பரின் வீட்டிற்குச் சென்று வந்தபோது விவேக்கின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டு, அது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. இதனையறிந்து விவேக் எச்சரித்தும் கோபிநாத் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இதனால் அடிக்கடி நண்பர்கள் இருவருக்கும் தகராறு ஏறுபட்டுவந்துள்ளது. இந்த நிலையில், கடந்த ஜூன் 29 அன்று கோபிநாத் சோலார் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, விவேக்கின் தூண்டுதலின் பேரில் அங்கு வந்த அவரது நண்பர்களான சரவணன் மற்றும் சதீஷ் ஆகியோர் கோபிநாத்திடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றியதில், அவரை அருகிலிருந்த காலி இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

அப்போது அங்கிருந்த கல்லை எடுத்து அவரது தலை மற்றும் முகத்தில் கொடூரமாகத் தாக்கிவிட்டுத் தப்பியோடினர். இதனையடுத்து பலத்த காயமடைந்த கோபிநாத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தாக்குதலுக்குக் காரணமான விவேக் மற்றும் அவரது நண்பர்களான சரவணன், சதீஷ் ஆகிய மூவரையும் உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கோபிநாத் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மூவர் மீதும் போலீசார் கொலை வழக்காகப் பிரிவை மாற்றி, கோபிநாத்தின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். நண்பரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த வாலிபர் அடித்துக் கொல்லப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in