இப்பவே இப்படியா..? என் மகளின் எதிர்காலமே முக்கியம்..! ஊர்வலத்தில் நடந்த மோதலால் கல்யாணத்தை பாதியிலேயே நிறுத்திய தந்தை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இப்பவே இப்படியா..? என் மகளின் எதிர்காலமே முக்கியம்..! ஊர்வலத்தில் நடந்த மோதலால் கல்யாணத்தை பாதியிலேயே நிறுத்திய தந்தை..!!

Published

on

ஆந்திர மாநிலம் மார்க்கபுரம் மாவட்டம் சின்னகனிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த வாலிபருக்கும், துரிமெல்லாவைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் செய்ய இருவீட்டாரும் முடிவு செய்திருந்தனர். இதற்கான திருமண ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்த நிலையில், திருமணத்திற்கு முந்தைய நாள் சனிக்கிழமை இரவு மணமகன் மற்றும் மணப்பெண் அழைப்பு ஊர்வலம் நடைபெற்றது. இரு குடும்ப உறவினர்களும், உள்ளூர் இளைஞர்களும் மணமக்களை ஒரு வாகனத்தில் ஏற்றி, மகிழ்ச்சியுடன் பாடல்களுக்கு நடனமாடியபடி ஊர்வலமாகச் சென்றனர்.

இந்த ஊர்வலத்தின் போது, அங்கிருந்த சிலர் மணமக்களைத் தங்களுடன் இணைந்து நடனமாடுமாறு அழைத்தனர். அதற்கு மணப்பெண் சம்மதித்த நிலையில், மணமகன் தனக்கு நடனமாட விருப்பமில்லை எனக் கூறி பிடிவாதமாக இருந்தார். அதுமட்டுமின்றி, மணப்பெண்ணும் நடனமாடக்கூடாது என்று எல்லோர் முன்னிலையிலும் கடும் கோபத்துடன் மணப்பெண்ணைக் கடிந்துகொண்டு சத்தம் போட்டார்.

Advertisement

திருமணத்திற்கு முன்பே மணமகன் இப்படிச் சிறு விஷயத்திற்குப் பொதுவெளியில் கோபப்படுவதைக் கண்ட மணமகளின் தந்தை பெரும் அச்சமடைந்தார். “கல்யாணத்துக்கு முன்பே இப்படியா? திருமணத்திற்குப் பிறகு மகளின் வாழ்க்கை எப்படி இருக்குமோ” என்று அவளுடைய எதிர்காலத்தைக் குறித்து கவலைப்பட்ட தந்தை, உடனடியாகத் தன் மகளை வாகனத்தில் இருந்து கீழே இறக்கினார். “இந்தத் திருமணம் வேண்டாம்” என்று கூறிவிட்டு எல்லோரையும் கூட்டிக்கொண்டு வீட்டிற்குச் சென்றார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, இறுதியில் அந்தத் திருமணம் நிறுத்தப்பட்டது. மணமகன் தரப்பினர் பெருமளவில் செலவு செய்திருந்ததால் சோகத்துடன் திரும்பிச் சென்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in