LATEST NEWS
44 லட்சம் ரூபாய்! நீதா அம்பானி குடிக்கும் ‘தங்க நீர்’ – உண்மை என்ன? இணையத்தை அதிரவைக்கும் உலகின் மிக விலையுயர்ந்த தண்ணீர் பாட்டில்..!!
சமீபத்தில் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வரும் புகைப்படத்தில், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீதா அம்பானி மிகவும் விலையுயர்ந்த தண்ணீர் பாட்டில் ஒன்றை கையில் வைத்திருப்பது போன்ற காட்சி வைரலானது. ‘அக்வா டி கிரிஸ்டல்லோ ட்ரிபுடோ ஏ மோடிக்லியானி’ என்று அழைக்கப்படும் இந்த பாட்டில் தான் உலகிலேயே மிக அதிக விலை கொண்ட தண்ணீர் பாட்டிலாகும். இதன் விலை சுமார் 44 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. சாதாரண பிளாஸ்டிக் அல்லது கண்ணாடிக்கு பதிலாக, இந்த தண்ணீர் பாட்டில் முழுவதுமாக 24 கேரட் தங்கத்தால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது இதன் சிறப்பம்சமாகும்.
இந்த 44 லட்ச ரூபாய் பாட்டிலில் அடைக்கப்பட்டுள்ள தண்ணீர் சாதாரணமானது அல்ல; இது பிரான்ஸ், பிஜி தீவுகளில் உள்ள இயற்கை நீரூற்றுகள் மற்றும் ஐஸ்லாந்து பனிப்பாறைகள் ஆகிய இடங்களில் இருந்து மிகவும் சுத்தமான முறையில் சேகரிக்கப்படுகிறது. மேலும், இந்த தண்ணீரில் 5 கிராம் தூய்மையான தங்கத் துகள்களும் கலக்கப்பட்டுள்ளதாம். நீதா அம்பானி இந்த தங்கத் தண்ணீரை குடிப்பதாக இணையத்தில் வைரலாகும் அந்த புகைப்படம் உண்மையில் எடிட் செய்யப்பட்ட மார்ஃபிங் படம் என பின்பு உறுதியானது. இருப்பினும், உலகிலேயே இவ்வளவு விலை உயர்ந்த மற்றும் தங்கம் கலக்கப்பட்ட ஒரு தண்ணீர் பாட்டில் இருப்பதை அறிந்து இணையவாசிகள் பலரும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
