1.10 லட்சத்துக்கு வெறும் 10 ரூபாய் நாணயமா? பைக் வாங்க சாக்கு மூட்டையுடன் வந்த இளைஞர்.. தரையில் கொட்டி எண்ணிய ஊழியர்கள்..ஷோரூமில் பரபரப்பு..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

1.10 லட்சத்துக்கு வெறும் 10 ரூபாய் நாணயமா? பைக் வாங்க சாக்கு மூட்டையுடன் வந்த இளைஞர்.. தரையில் கொட்டி எண்ணிய ஊழியர்கள்..ஷோரூமில் பரபரப்பு..!

Published

on

தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த ரகுபதி என்ற இளைஞர், புதிய மாடல் பைக் ஒன்றை வாங்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவை சற்று வித்தியாசமான முறையில் நிறைவேற்றியுள்ளார். பைக்குக்கான முழுத் தொகையையும் 10 ரூபாய் நாணயங்களாகவே செலுத்த திட்டமிட்ட அவர், இதற்காக மாவட்டம் முழுவதும் உள்ள பெட்டிக்கடைகள், உணவகங்கள் என பல்வேறு இடங்களுக்குச் சென்று சளைக்காமல் 10 ரூபாய் நாணயங்களை சேகரித்துள்ளார். போதுமான தொகை சேர்ந்ததும் அந்த நாணயங்களை சாக்குப்பைகளில் கட்டிக்கொண்டு இருசக்கர வாகன ஷோரூமிற்குச் சென்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

இவரது வித்தியாசமான ஆசையைக் கேட்ட ஷோரூம் நிர்வாகமும் நாணயங்களை பெற்றுக்கொள்ள சம்மதித்தது. இதனையடுத்து, மூட்டைகளில் இருந்த நாணயங்கள் தரையில் கொட்டப்பட்டு பல மணி நேரமாக ஊழியர்களால் எண்ணப்பட்டன. மொத்தம் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான அந்த 10 ரூபாய் நாணயங்களை சரியாக எண்ணி முடித்த பின், ஷோரூம் நிர்வாகம் அவருக்கு புதிய பைக்கின் சாவியை வழங்கியது. நாணய மூட்டைகளுடன் வந்து இளைஞர் பைக் வாங்கிய இந்த சுவாரஸ்யமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in