LATEST NEWS
“கணவன் ஒரு நதி!” – குளிர்காலத்திலும் நதியுடன் ரொமான்ஸ் செய்யும் இளம்பெண்.!இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்…!!
இங்கிலாந்தில் உள்ள ஏவோன் நதியை திருமணம் செய்துகொண்ட சுற்றுச்சூழல் ஆர்வலரான மேக் என்ற பெண்ணின் கதைதான் தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. பிரிஸ்டல் பகுதியைச் சேர்ந்த 29 வயதான மேகன் ரூத்-ட்ரம்ப் என்பவர், கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மணப்பெண்ணாக அலங்கரித்து, தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இந்த நதியை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு தனது பெயரையே ‘மேக் ஏவோன்’ என மாற்றிக்கொண்ட இவர், தற்போது தனது 3-வது திருமண நாளை கொண்டாடியுள்ளார். குளிர்காலமாக இருந்தாலும் வாரத்திற்கு ஒருமுறையாவது தனது ‘நதி கணவருடன்’ நேரத்தை செலவிடுவதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இவர் ஏதோ வேடிக்கைக்காகவோ அல்லது மனநல பாதிப்பாலோ இந்த முடிவை எடுக்கவில்லை. இங்கிலாந்து நீர்நிலைகளில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் அதிக அளவில் ரசாயன கழிவுகளை கலப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்தான் இந்த விசித்திரமான திருமணத்தை அவர் ஒரு போராட்டமாக முன்னெடுத்துள்ளார். நதிகளுக்கும் மனிதர்களைப் போல சட்டப்பூர்வமாக வாழும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதற்காக போராடி வரும் இவரது இந்த வினோத காதல் கதை, சாதாரண மக்களுக்கும் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய இந்த முயற்சிகள் தற்போது ‘Rave On for the Avon’ என்ற பெயரில் ஆவணப்படமாகவும் வெளியாகி சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வருகிறது.
