LATEST NEWS
“விஜய் சொன்னது அப்பட்டமான பொய்” வீடியோ ஆதாரத்துடன் வெளுத்து வாங்கிய திமுக ஐடி விங்.. இப்படியொரு அரசியல் தேவையா..? தவெகவின் கரூர் நாடகம் அம்பலம்..??
கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், கடந்த ஆண்டு நடந்த மாநாட்டு நெரிசல் விபத்துக்கு அப்போதைய திமுக அரசே காரணம் என்று குற்றம் சாட்டினார். “நாங்கள் நாமக்கல்லில் இருந்து வரும்போதே கூட்டம் அதிகமாக உள்ளது, கூட்டத்தை ரத்து செய்யுங்கள் என்று காவல்துறையினர் எங்களை எச்சரித்திருந்தால் இந்த விபத்தே நடந்திருக்காது; ஆனால், அவர்கள்தான் எங்களை விபத்து நடந்த இடம் வரை கூட்டிச் சென்றனர்” என்று விஜய் கூறினார்.
முதலமைச்சர் விஜய்யின் இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் பொய் என்று திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆதாரத்துடன் மறுத்துள்ளது. கரூர் விபத்து நடந்த சமயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதத்தின் பழைய வீடியோவை திமுக ஐடி விங் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், கரூர் மேம்பாலத்திலிருந்து விஜய் பேசிய இடம் வரைக்கும் டிஎஸ்பி தான் தவெக நிர்வாகிகளிடம் தொடர்ந்து பேசிப் பாதுகாப்பாகக் கூட்டிச் சென்றார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், விஜய் பேசுவதற்கு 50 மீட்டருக்கு முன்பாகவே வாகனத்தை நிறுத்தி, “கூட்டம் அதிகமாக இருக்கிறது, இங்கேயே நின்று பேசுங்கள்” என்று டிஎஸ்பி எச்சரித்ததாக அந்த வீடியோவில் ஏடிஜிபி கூறியுள்ளார். ஆனால், தவெக கூட்ட அமைப்பாளர்கள் அந்த எச்சரிக்கையை ஏற்காமல், மக்கள் அங்கே காத்திருக்கிறார்கள், மைக்கில் பேசினால் கேட்காது என்று காரணங்களைக் கூறி வாகனத்தைக் கூட்டத்திற்குள் கொண்டு சென்றதே விபத்துக்குக் காரணம் என திமுக சாடியுள்ளது. “அப்பாவி மக்களைப் பகடைக்காயாக்கி இப்படி ஒரு அரசியல் தேவையா விஜய் சார்?” என்றும் திமுக ஐடி விங் கேள்வி எழுப்பியுள்ளது.
