LATEST NEWS
நடுவானில் நடந்த திகில்? கண்முன்னாடி வந்த மரண ஓலை..!மயிலையில் உயிர் தப்பிய பயணி.. நடுவானில் கழன்று விழுந்த விமான ஜன்னல்… அதிர்ந்து போன பகீர் சம்பவம்..!!
விமானப் பயணத்தின் போது எதிர்பாராதவிதமாக ஜன்னல் கண்ணாடி திடீரெனக் கழன்று விழுந்ததால், பயணி ஒருவர் பாதி உடலுடன் வெளியே இழுக்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. செர்பியா நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவருக்கே இந்த எதிர்பாராத கொடூர அனுபவம் ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக மரணத்தின் விளிம்பு வரை சென்ற அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
இந்த விமானம் கிரீஸ் நாட்டின் தெசலோனிகி நகரிலிருந்து ஜெர்மனியின் மெம்மிங்கன் நகரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது நடுவானில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. திடீரென விமானத்தின் ஜன்னல் ஒன்று முழுவதுமாக கழன்று விழுந்த நிலையில், கேபினில் ஏற்பட்ட அதீத அழுத்த மாறுபாடு காரணமாக அந்தப் பயணி ஜன்னல் வழியாக வெளியே இழுக்கப்பட்டார். ஒரு கட்டத்தில் அவரது தலை மற்றும் தோள்பட்டைப் பகுதி முழுமையாக விமானத்திற்கு வெளியே காற்றில் தொங்கியபடி இருந்துள்ளது.
உடனடியாகச் செயல்பட்ட விமான ஊழியர்கள் மற்றும் சக பயணிகளின் போராட்டத்தால் அவர் பத்திரமாக மீண்டும் உள்ளே இழுக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். இந்த பயங்கரமான சம்பவத்தில், பலத்த காற்றின் உராய்வு காரணமாக அவருக்கு உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டன. விமானம் தரையிறங்கியதும் உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு ஏற்பட்ட காயங்களைத் தவிர்த்து, அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
