“அவன் அவ்வளவு வொர்த் இல்ல!”.. தவெக எம்.எல்.ஏ சரவணனை டோட்டலாக டேமேஜ் செய்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அவன் அவ்வளவு வொர்த் இல்ல!”.. தவெக எம்.எல்.ஏ சரவணனை டோட்டலாக டேமேஜ் செய்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்..!!

Published

on

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் சரவணனிடம் திமுகவினர் யாரும் பேரம் பேசவில்லை என்றும், அந்த அளவுக்கு எல்லாம் அவர் தகுதியானவர் இல்லை என்றும் தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக மீது வைக்கப்படும் இந்த குற்றச்சாட்டில் உண்மைத்தன்மை இல்லை என்றும், ஆடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாகக் கூறும் சரவணன், தைரியம் இருந்தால் அதனை ஏன் முழுமையாக வெளியிடவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தன் மீது இருக்கும் பிற குற்றச்சாட்டுகளில் இருந்தும், பிரச்சினைகளில் இருந்தும் மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே இது போன்ற பொய்யான புகார்களைக் கூறி நாடகமாடி வருகிறார் என்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சாடியுள்ளார். தவெக மற்றும் திமுக இடையே அரசியல் வட்டாரத்தில் பரவி வரும் இந்த பேரம் பேசும் சர்ச்சை, தற்போது இந்த விமர்சனத்தின் மூலம் மேலும் சூடுபிடித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in