“இனி EPS ஒப்புதல் வேண்டும்”.. அதிமுகவில் அடுத்த மாஸ்டர் பிளான்.. நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி வைத்த கிடுக்கிப்பிடி செக்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இனி EPS ஒப்புதல் வேண்டும்”.. அதிமுகவில் அடுத்த மாஸ்டர் பிளான்.. நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி வைத்த கிடுக்கிப்பிடி செக்..!!

Published

on

அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதல் இன்றி எந்தவொரு கட்சி நிகழ்ச்சிகளையும் நடத்தக் கூடாது என கட்சித் தலைமை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைமையின் முறையான அனுமதி இல்லாமலேயே சில இடங்களில் தன்னிச்சையாக கட்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கு வந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கட்சியின் ஒழுங்கை நிலைநாட்ட இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இளைஞர்களை இணைய வழியில் அதிக அளவில் ஒருங்கிணைக்கும் நோக்கில், விரைவில் பிரத்யேக இணையவழி படிவம் (Online Form) ஒன்று வெளியிடப்பட உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நேரடி ஒப்புதல் மற்றும் அனுமதி இல்லாமல் மாவட்ட அமைப்புகளோ அல்லது பிற அணிகளோ எந்தவொரு நிகழ்ச்சியையும் தன்னிச்சையாக நடத்தக் கூடாது எனத் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in