LATEST NEWS
அட! என்னமா நீ.. தண்ணீர்னு நினைச்சு ஆசிட் குடித்த இளம்பெண்.. நகைக்கடையில் நடந்த கொடூரம்… நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி வீடியோ..!!
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு நகைக்கடையில், தண்ணீர் என்று நினைத்து ஆசிட் குடித்த இளம்பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் துடிதுடித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடையில் வைக்கப்பட்டிருந்த பாட்டிலில் இருந்த திரவத்தை தண்ணீர் என தவறுதலாகக் கருதி அவர் குடித்த உடனே, ஆசிட்டின் வீரியத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு அலறியுள்ளார். இச்சம்பவத்தை அடுத்து, அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்ட அந்த இளம்பெண் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வருகிறார்.
बिसलेरी के बोतल में तेजाब। सोचिए इसे पानी समझकर कोई पी ले तो क्या होगा। एक स्कूल टीचर के साथ यही जानलेवा कांड हो गया। टीचर रिया दुकान पर ज्वैलरी खरीदने गई थीं । इन्हें प्यास लगी। दुकानदार ने नौकर से पानी मंगाया। नौकर फ्रिज से एक बोतल निकाल दे दिया। रिया ने उसे मुंह में डाला। उसके… pic.twitter.com/GsX8pT3reb— Sunil Maurya (@smaurya_journo) July 11, 2026
இந்த கொடூர சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், நகைக்கடை உரிமையாளரிடம் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கடையில் இருந்த தண்ணீர் பாட்டிலின் சீல் (Seal) உடைக்கப்படாமல் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், அதற்குள் எப்படி ஆசிட் வந்தது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கடை ஊழியர்களின் அலட்சியமா அல்லது இதற்குப் பின்னால் ஏதேனும் திட்டமிட்ட சதி உள்ளதா என்ற கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ள போலீசார், சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
