LATEST NEWS
யாரும் எதிர்பார்க்காத திருப்பம்!.. பாடநூல் கழக தலைவராக நியமிக்கப்பட்ட லயோலா மணி.. வெளியான அதிரடி அறிவிப்பு..!!
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக லயோலா மணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலையில், முதலமைச்சர் விஜய் இந்த பணி நியமன ஆணையை லயோலா மணியிடம் வழங்கினார். லயோலா மணிக்கு விரைவில் கட்சிலோ அல்லது அரசாங்கத்திலோ ஒரு நல்ல பொறுப்பு வழங்கப்படும் என்று என். ஆனந்த் அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில் குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது இந்த முக்கியப் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, கடந்த தி.மு.க ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக பிரபல பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் ஐ. லியோனி பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு செயல்பட்டு வரும் சூழலில், பாடநூல் கழகத்தின் புதிய தலைவராக லயோலா மணி பொறுப்பேற்றுள்ளது அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
