LATEST NEWS
விஜய்யை நோக்கி வரவிருந்த ‘அந்த’ 10 விக்கெட்!.. கடைசி நேரத்தில் ட்விஸ்ட் அடித்த அதிமுக MLA-க்கள்.. அப்செட்டில் த.வெ.க..!!
தமிழகத்தில் இடைத்தேர்தலுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது முதலமைச்சர் விஜய்க்குப் பெரும் பின்னடைவாக அமைந்திருப்பதாகத் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அ.தி.மு.க.வைச் சேர்ந்த மேலும் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்குத் தீவிர பேச்சுவார்த்தைகள் நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் த.வெ.க-வில் இணைந்த பிறகு இடைத்தேர்தலைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது நீதிமன்றம் அல்லது தேர்தல் ஆணையம் மூலம் இடைத்தேர்தலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், அந்த 10 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களும் தங்களது முடிவில் இருந்து தற்காலிகமாகப் பின்வாங்கியுள்ளதாகத் தெரிகிறது.
சட்டமன்றத்தில் தங்களது அரசுக்கான தனிப் பெரும்பான்மையை வலுப்படுத்திக் கொள்ளவும், எதிர்க்கட்சிகளைப் பலவீனப்படுத்தவும் தீவிரமாகக் காய் நகர்த்தி வந்த விஜய் தரப்புக்கு இந்தத் தடை உத்தரவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இடைத்தேர்தல் தள்ளிப்போவது த.வெ.க-வின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளையும், பிற கட்சி நிர்வாகிகளை ஈர்க்கும் திட்டங்களையும் முடக்கியுள்ளதால், இந்தச் சூழலை எப்படி கையாள்வது என்பது குறித்து முதலமைச்சர் விஜய் தனது முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகத் த.வெ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
