LATEST NEWS
“அவங்கள நாமதான் தாங்கிப் பிடிக்கணும்..” – மேடையில் உருகிய அண்ணாமலை…! தளபதி ரசிகர்கள் நெகிழ்ச்சி…!!
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான விஜய், பத்திரிகையாளர்களைச் சந்திப்பதைத் தொடர்ந்து தவிர்த்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் கடந்து செல்வதை, பிரதான எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இருப்பினும், எதிர்க்கட்சிகளின் இந்த விமர்சனங்களைப் புறந்தள்ளும் தவெக அமைச்சர்கள், தேவையேற்படும் தகுந்த நேரத்தில் முதலமைச்சர் கட்டாயம் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்வார் எனத் தொடர்ந்து அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்தச் பரபரப்பான சூழ்நிலையில், பொள்ளாச்சியில் நடைபெற்ற ‘வி த லீடர்ஸ்’ அமைப்பின் முதல் மாநாட்டில் அதன் தலைவர் அண்ணாமலை பேசிய கருத்துகள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன. தவெக தலைவர் விஜய் ஊடகங்களைச் சந்திக்காதது குறித்து மாநாட்டில் அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விஜய்யைக் கடுமையாகச் சாடுமாறு தன்னிடம் பலரும் வலியுறுத்தியதாகத் தெரிவித்த அண்ணாமலை, எதிர்பார்ப்புகளுக்கு நேர்மாறான ஒரு முதிர்ச்சியான நிலைப்பாட்டை மேடையில் வெளிப்படுத்தினார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்களின் வாக்குகளையும் நம்பிக்கையையும் பெற்று வெற்றி பெற்றிருக்கும் ஒரு புதிய ஆட்சிக்கு, ஜனநாயக அடிப்படையில் முழுமையான மரியாதை அளிக்க வேண்டியது அனைவரின் கடமை என அவர் சுட்டிக்காட்டினார். மேலும், எளிய பின்புலத்திலிருந்து பல சவால்களைத் தாண்டி வந்து தற்போது எம்.எல்.ஏ-க்களாகவும், அமைச்சர்களாகவும் பதவியேற்றுள்ள புதியவர்களுக்கு ஆரம்பகாலகட்டத்தில் சில அரசியல் தடுமாற்றங்கள் இருப்பது இயல்பான ஒன்றுதான் என்றும் அவர் கூறினார். அவர்களைக் குறைகூறுவதைத் தவிர்த்து, இந்தத் தொடக்கக் கட்டத்தில் அவர்களை அரவணைத்துத் தாங்கிப் பிடிக்க வேண்டியதே தற்போதைய தேவை என அண்ணாமலை பெருந்தன்மையுடன் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.
