“கல்யாண மேடையில.. ‘கலக்கப் போவது யாரு’னு பார்த்தா… கடைசியில ‘தூசியை கிளப்புவது யாரு’னு ஆகிடுச்சு..!”இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கல்யாண மேடையில.. ‘கலக்கப் போவது யாரு’னு பார்த்தா… கடைசியில ‘தூசியை கிளப்புவது யாரு’னு ஆகிடுச்சு..!”இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

Published

on

திருமண விழாக்களில் மணமேடையில் நடனமாடுவது அல்லது கலை நிகழ்ச்சிகளை நடத்துவது தற்போதைய ட்ரெண்டாக மாறியுள்ளது. அவ்வாறான ஒரு திருமண விழாவில், சிறுவன் ஒருவன் மணமேடையில் மணமக்களுக்கு முன்னால் தனது திறமையைக் காட்ட நினைத்து, பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராஃப் பாணியில் அதிரடியாகப் பின்னோக்கி கரணம் அடித்து ஸ்டண்ட் செய்துள்ளான். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்தச் சிறுவன் மேடைக்கு வந்து முதலில் இரண்டு முறை லேசாகப் பின்னோக்கி கரணம் அடித்து மணமக்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான். அதுவரை நிலைமை கட்டுக்குள் இருந்தது. ஆனால், அதன் பிறகு அவன் காட்டிய அதீத ஆர்வம் வினையாக முடிந்தது. அவன் மேடையில் விரிக்கப்பட்டிருந்த கம்பளத்தின் மீது மிக வேகமாகத் தொடர்ந்து கரணமடிக்கத் தொடங்கினான். இதனால் அந்தப் பழைய கம்பளத்தில் இருந்த தூசிகள் அனைத்தும் மொத்தமாகப் புகைபோல காற்றில் பறந்து மேடை முழுவதையும் சூழ்ந்தன.

Advertisement

மணமேடையில் மணமகள் அழகாக ஒப்பனை செய்துகொண்டு அமர்ந்திருந்தார். சிறுவன் கிளப்பிய தூசிப் படலம் நேராக மணமக்களின் முகத்தில் போய் அடித்தது. இதனால் ஆத்திரமடைந்த மணமகள், தனது கோபத்தையும் எரிச்சலையும் முகபாவனையின் மூலம் வெளிப்படுத்தினார். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், சிறுவனின் திறமையைப் பாராட்டி “நிஜமாகவே தூசியைக் கிளப்பிவிட்டான்” என்று கிண்டலாகக் கமெண்ட் செய்து வருகின்றனர். அதே சமயம், மணமகளின் கோபமான முகபாவனையும் இந்த வீடியோவில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in