LATEST NEWS
“தீவிரமான போராட்டம்.. தரம் தாழ்ந்த கன்டென்ட்…” ஃபுட் வ்லாகர் ஆயுஷ் சப்ரா மீது மக்கள் கொந்தளிப்பது ஏன்..? வைரல் வீடியோவால் வெடித்த சர்ச்சை…!!
அந்த வைரல் வீடியோவில், போராட்டக் களத்தில் உள்ள தொண்டர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்காக தயாரிக்கப்பட்ட சமோசா, சோலே மற்றும் ராஜ்மா-சாவல் போன்ற உணவுகளை ஆயுஷ் சப்ரா ருசித்து விமர்சனம் செய்கிறார். மேலும், “இங்கு சோனம் வாங்சுக் மட்டும்தான் பசியோடு இருக்கிறார், மற்றவர்கள் அனைவரும் வயிறு முட்ட சாப்பிடுகிறார்கள்” என்று அவர் கிண்டலாகப் பேசுகிறார். சோனம் வாங்சுக் தொடர் உண்ணாவிரதத்தால் 8 கிலோவிற்கும் மேல் உடல் எடை குறைந்து உடல்நிலை மோசமாக இருக்கும் வேளையில், அங்கு சென்று சமோசாவையும் சட்னியையும் காட்டி வ்லாக் செய்தது, சமூகப் போராட்டத்தையும் முதியவரின் தியாகத்தையும் அவமதிக்கும் செயல் என பெரும்பாலான நெட்டிசன்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.
மறுபுறம், ஆயுஷ் சப்ராவுக்கு ஆதரவாகவும் இணையத்தில் ஒரு தரப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர். எந்தவொரு பெரிய போராட்டக் களத்திலும் அங்கு வரும் தன்னார்வலர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்காக உணவு சமைக்கப்படுவது இயல்பான ஒன்றுதான் என்றும், அதைத்தான் அவர் காட்டியுள்ளார் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். மேலும், இதுபோன்ற நகைச்சுவையான மற்றும் சுவாரசியமான வீடியோக்கள் மூலமாகவே, அரசியல் செய்திகளைப் பார்க்காத இன்றைய இளைஞர்களுக்கும் சோனம் வாங்சுக்கின் போராட்டம் குறித்த விழிப்புணர்வு சென்று சேர்ந்துள்ளது என்றும் சிலர் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
