LATEST NEWS
“அதிமுகவை யாரிடமாவது ஒப்படைச்சிட்டு கிளம்புங்க சார்” இல்லனா என்ன நாடாகும் தெரியுமா..? எடப்பாடி பழனிசாமியை வெளுத்து வாங்கிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்..!!
அதிமுக என்ற மிகப்பெரிய இயக்கம் அழிவுப் பாதையை நோக்கிச் செல்வதற்கு அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தான் முழு காரணம் என்று தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். எம்.ஜி.ஆர். பாடுபட்டுத் தொடங்கிய இந்தக் கட்சியை இபிஎஸ் தற்போது மூட்டை கட்டி வைத்துவிட்டு, சேலத்தில் முடங்கி வெறும் மாவட்டச் செயலாளர் போலச் செயல்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜானகி ராமச்சந்திரன், அன்று கட்சியின் நலன் கருதி ஜெயலலிதாவிடம் அதிமுகவை ஒப்படைத்தது போல, இபிஎஸ்ஸும் தன் தவற்றை உணர்ந்து கட்சியைக் காப்பாற்ற யாரிடமாவது ஒப்படைத்துவிட்டு ஒதுங்க வேண்டும் என்று அவர் சாடியுள்ளார். அவ்வாறு செய்யத் தவறினால் அதிமுக என்ற கட்சியே முழுமையாக அழிந்துவிடும் என்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் எச்சரித்துள்ளார்.
