“மாமா கூடத்தான் வாழ்வேன்”ரூ .4 லட்சத்தை சுருட்ட காதலிக்கு கல்யாணம் செய்து வைத்த பெயிண்டர்… முதலிரவு முடிந்ததும் ஷாக் கொடுத்த புதுப்பெண்… கடைசியில் சரியான டுவிஸ்ட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மாமா கூடத்தான் வாழ்வேன்”ரூ .4 லட்சத்தை சுருட்ட காதலிக்கு கல்யாணம் செய்து வைத்த பெயிண்டர்… முதலிரவு முடிந்ததும் ஷாக் கொடுத்த புதுப்பெண்… கடைசியில் சரியான டுவிஸ்ட்..!!

Published

on

வேலூர் மாவட்டம் மேல்பாடி அருகே உள்ள சிவபுரம் கிராமத்தில், காதலித்து வந்த பெண்ணை திட்டமிட்டு வேறொருவருக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டு, சில நாட்களிலேயே அவருடன் வீட்டை விட்டு ஓடிய முனுசாமி என்ற நபரின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவபுரத்தைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவருக்கு நீண்ட நாட்களாகத் திருமணமாகாததால், சென்னையில் கட்டுமானத் தொழில் செய்து வரும் அவரது அண்ணன் ஜெய்சங்கர் பெண் தேடி வந்துள்ளார். அப்போது அவரிடம் பெயிண்டராக வேலை செய்து வந்த முனுசாமி, தன் உறவுக்காரப் பெண்ணான அபிநயாவைத் திருமணம் செய்து தருவதாகக் கூறி கஜேந்திரனின் குடும்பத்தினரை நம்ப வைத்துள்ளார்.

இதையடுத்து மணமகளுக்குத் தேவையான நகைகள், பட்டுப்புடவை உள்ளிட்ட அனைத்தையும் கஜேந்திரனின் அண்ணன் ஜெய்சங்கர் தனது சொந்த செலவில் சுமார் 4 லட்சம் ரூபாய் வரை செலவழித்து சோளிங்கர் முருகன் கோவிலில் கடந்த மாதம் விமரிசையாகத் திருமணம் செய்து வைத்துள்ளார். ஆனால், திருமணமான மறுநாளிலிருந்தே அபிநயா கணவருடன் பேசாமல் எப்போதும் தனது மாமா முனுசாமியுடனேயே கைபேசியில் பேசி வந்துள்ளார். சுமார் 15 நாட்கள் மட்டுமே நீடித்த இந்த திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஒரு நாள் நள்ளிரவில் அபிநயா திடீரென வீட்டை விட்டு மாயமானார்.

Advertisement

இதுகுறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அபிநயா தனது மாமா முனுசாமியுடன் நேரில் ஆஜராகி, “நான் கஜேந்திரனுடன் வாழப் போவதில்லை, என் மாமா முனுசாமியுடன் தான் வாழப் போகிறேன்” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். அதன் பிறகுதான், அபிநயா என்பவர் முனுசாமியின் மனைவியின் தங்கை என்பதும், காதலித்த பெண்ணை பணத்திற்காக நாடகமாடித் திருமணம் செய்து வைத்து ஏமாற்றியதும் கஜேந்திரனின் குடும்பத்தினருக்குத் தெரியவந்தது. தற்போது கஜேந்திரன், தன்னை ஏமாற்றிய முனுசாமி மற்றும் அபிநயா மீது மோசடி நடவடிக்கை எடுத்து, தனது 4 லட்சம் ரூபாய் திருமணச் செலவை மீட்டுத் தருமாறு வேலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் உருக்கமாகப் புகார் அளித்துள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in