LATEST NEWS
பாலியல் குற்றவாளிகளுடன் கள்ளத்தொடர்பு… வழக்குகளை மறைத்து உல்லாசமாக இருந்த அரசு பெண் வழக்கறிஞர்… அடுத்து நடந்த அதிர்ச்சி.. அமெரிக்காவில் அம்பலமான அதிர்ச்சி உண்மை..!!
அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள ரே கவுண்டியின் உயர்நிலை அரசு பெண் வழக்கறிஞர் கமிலே ஜான்ஸ்டன், பாலியல் குற்றவாளிகள் உட்பட மூன்று ஆண்களுடன் முறையற்ற கள்ளத்தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். மிசோரி தலைமை வழக்கறிஞர் கேத்தரின் ஹனாவே தாக்கல் செய்த ஊழல் மற்றும் முறைகேடு புகார்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்ற நீதிபதி, வியாழக்கிழமையன்று அவரைப் பதவிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
ஜான்ஸ்டன், தன் அலுவலகம் விசாரித்து வந்த வழக்கில் தொடர்புடைய மெக்சிகோவைச் சேர்ந்த தனது முன்னாள் காதலன் ஜே.ஜி. (J.G.) என்பவரைப் பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து காப்பாற்ற முயன்றுள்ளார். அவர் தலைமறைவாக இருக்கத் தனது சொந்த காரைக் கொடுத்து உதவியதுடன், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் தன் அலுவலக ஊழியர்களிடம் இருந்து இந்த ரகசிய உறவை மறைத்து வழக்குத் தொடரவும் தவறியுள்ளார்.
இதுமட்டுமன்றி, ஜான்ஸ்டன் தான் விசாரித்த வழக்குகளில் எதிர்தரப்புக்காக வாதாடிய ஒரு பாதுகாப்பு வழக்கறிஞருடனும், குடும்ப வன்முறை வழக்கில் தொடர்புடைய மற்றொரு திருமணமான நபருடனும் கள்ள உறவில் இருந்துள்ளார். இந்த முறைகேடுகள் குறித்து கேள்வி எழுப்பிய தனது அலுவலக ஊழியர் ஒருவரை அவர் பணிநீக்கம் செய்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
