LATEST NEWS
அட.. நாங்களும் சின்ன வயசுல இதுலதான் போனோம்..! இது இன்னும் ஓடிட்டுதான் இருக்கா..? குட்டிச் சுட்டிகளின் சைக்கிள் ரிக்ஷாவைப் பார்த்து வியந்த பெரியவர்கள்..!!
ஒரு காலத்தில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கு சைக்கிள் ரிக்ஷாவே முக்கியப் போக்குவரத்தாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. காலப்போக்கில் இ-ரிக்ஷாக்கள், ஆட்டோக்கள் மற்றும் பிற வாகனங்களின் வருகையால் இந்த பெரிய பழைய சைக்கிள் ரிக்ஷாக்கள் மெதுவாக வழக்கொழிந்து போயின. இருப்பினும், இவை முற்றிலும் மறைந்துவிடவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், சிறிய நகரங்களில் இன்னமும் பயன்பாட்டில் இருக்கும் சைக்கிள் ரிக்ஷாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி, பெரியவர்களுக்குத் தங்களது பள்ளிப் பருவத்தின் நினைவுகளை மீண்டும் நினைவூட்டியுள்ளது.
பிரிஷா குப்தா என்பவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், நபர் ஒருவர் கேமராவுடன் சைக்கிள் ரிக்ஷாவின் அருகே செல்லும்போது, அதற்குள் குட்டிச் சுட்டிகள் மிகவும் செல்லமாக அமர்ந்திருப்பது தெரிகிறது. மற்றொரு சிறுமி அங்கு வரும்போது, குழந்தைகள் அவருக்கும் இடமளித்து, கேமராவைப் பார்த்துப் புன்னகைக்கின்றனர். மிதிவண்டியை மிதிப்பதற்கு அதிக உடல் உழைப்பு தேவைப்பட்டாலும், அந்த ரிக்ஷா ஓட்டுநர் குழந்தைகளை மிகவும் பாதுகாப்பாக அழைத்துச் செல்வது பார்ப்போரின் மனதைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.
https://www.instagram.com/reel/DazIXOcSTWj/?utm_source=ig_web_button_share_sheet
இந்த வீடியோவை இதுவரை 28 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர் மற்றும் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். இதைப் பார்த்த பயனர்கள் பலர், “நாங்களும் சிறுவயதில் இந்த ரிக்ஷாவில் தான் பள்ளிக்குச் சென்றோம், பழங்கால நினைவுகள் மீண்டும் வந்துவிட்டன” என்றும், சிலர் “இப்போதெல்லாம் இந்த ரிக்ஷாவை இயக்குவது கடினம், அதை இயக்கும் பெரியவருக்கும், இன்னமும் அதை நம்பி குழந்தைகளை அனுப்பி வைக்கும் பெற்றோர்களுக்கும் பாராட்டுக்கள்” என்றும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
