அட சூப்பர்ல…! இனி ஜிபே-வை தேட வேண்டாம்… எக்ஸ் ஆப்-ல இருந்தே யாருக்கு வேணாலும் காசு அனுப்பலாம்..! எலான் மஸ்க் கொடுத்த அதிரடி சர்ப்ரைஸ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அட சூப்பர்ல…! இனி ஜிபே-வை தேட வேண்டாம்… எக்ஸ் ஆப்-ல இருந்தே யாருக்கு வேணாலும் காசு அனுப்பலாம்..! எலான் மஸ்க் கொடுத்த அதிரடி சர்ப்ரைஸ்..!!

Published

on

முன்னதாக கூகுள் பே, போன்பே உள்ளிட்ட சில செயலிகள் மூலம் மட்டுமே ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது வாட்ஸ்அப், அமேசான் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் தங்களது செயலிகளில் பணம் அனுப்பும் வசதியை வழங்கி வருகின்றன.

அந்த வரிசையில், சமூக வலைதளமான ட்விட்டரை வாங்கி அதற்கு ‘X’ எனப் பெயர் மாற்றியுள்ள எலான் மஸ்க், தற்போது எக்ஸ் செயலியிலேயே நேரடியாக பணப்பரிவர்த்தனை செய்யும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த புதிய அம்சத்தின் மூலம், எக்ஸ் பயனர்கள் செயலியை விட்டு வெளியேறாமல் மற்றவர்களுக்கு பணம் அனுப்பவும், பல்வேறு கட்டணங்களைச் செலுத்தவும் முடியும். இதன் மூலம் சமூக வலைதளமாக மட்டுமே இருந்த எக்ஸ், நிதி சேவைகளையும் வழங்கும் பல்நோக்கு தளமாக மாறவுள்ளது.

Advertisement

இதுகுறித்து எலான் மஸ்க் கூறுகையில், சமூக ஊடகத் தளத்தைத் தாண்டி, மக்களின் அன்றாட தேவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் ‘சூப்பர் ஆப்’ ஆக எக்ஸை மாற்றுவதே தங்களின் இலக்கு என்றும், அதற்கான முக்கிய முன்னெடுப்பாக இந்த பணப்பரிவர்த்தனை வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in