அடேங்கப்பா..! 18 வயதில் வரலாற்றுச் சாதனை… 306 வருட ரெக்கார்டை தூக்கிச் சாப்பிட்ட அதிமேதாவி.. யார் இந்த நாதன் தாமஸ்..? வைரலாகும் நிஜக் கதை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடேங்கப்பா..! 18 வயதில் வரலாற்றுச் சாதனை… 306 வருட ரெக்கார்டை தூக்கிச் சாப்பிட்ட அதிமேதாவி.. யார் இந்த நாதன் தாமஸ்..? வைரலாகும் நிஜக் கதை..!!

Published

on

பள்ளி முடித்து கல்லூரியில் எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுப்பது என்று இளைஞர்கள் குழம்பிக் கொண்டிருக்கும் வேளையில், அமெரிக்காவைச் சேர்ந்த நேத்தன் தாமஸ் என்ற 18 வயது இளைஞர் உலகின் மிக இளம் வயது பேராசிரியராக மாறி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 1717-ஆம் ஆண்டில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பிரபல கணிதவியலாளர் காலின் மேக்லரின் தனது 19-வது வயதில் பேராசிரியராகப் பொறுப்பேற்றதே முந்தைய சாதனையாக இருந்தது. 306 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த இந்த சாதனையை, நேத்தன் தாமஸ் ஆகஸ்ட் 2023-இல் மியாமி டேட் கல்லூரியில் பேராசிரியராக இணைந்ததன் மூலம் முறியடித்துள்ளார். மேலும், 2008-இல் 18 வயதில் உலகின் மிக இளம் வயது பெண் பேராசிரியராகச் சாதனை படைத்த அலியா சாபூரை விட நேத்தன் 16 நாட்கள் இளையவர் என்பதால், ஆண்-பெண் இருபாலரிலும் உலகின் மிக இளம் பேராசிரியர் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் தன்வசமாக்கியுள்ளார்.

நேத்தன் தனது 10-வது வயதிலேயே பள்ளிப் படிப்புடன் சேர்த்து மியாமி டேட் கல்லூரியில் உயர்கல்வியையும் தொடங்கினார். பின்னர் 14-வது வயதில் புளோரிடா சர்வதேசப் பல்கலைக்கழகத்திற்கு மாறிய அவர், மின் பொறியியல் துறையில் (Electrical Engineering) இளங்கலை மற்றும் முதுகலை ஆகிய இரண்டு பட்டங்களையும் தனது 18 வயதிற்குள்ளேயே வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து, 2023 ஆகஸ்ட் மாதம் மியாமி டேட் கல்லூரியில் பொறியியல் மாணவர்களுக்கான சி-ப்ரோக்ராமிங் (C-Programming) பாட ஆசிரியராக அவர் பணியில் இணைந்தார். அவர் வகுப்பெடுத்த வகுப்பறையில் இருந்த பெரும்பாலான மாணவர்கள் அவரது வயதை ஒத்தவர்களாகவோ அல்லது அவரை விட மூத்தவர்களாகவோ இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கின்னஸ் உலக சாதனை அமைப்பின் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தின் மூலம் இவரது இந்த அசாத்திய சாதனை உலகளவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in