LATEST NEWS
“அந்த ஒரு ரீல்ஸ் போட்டதற்கு இப்படியா..?!” பணிக்குத் திரும்பிய சில நாட்களிலேயே ஆசிரியர் எடுத்த அதிரடி முடிவு.. கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட அரசு பள்ளி ஆசிரியர்..!!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் சர்ச்சை காரணமாகச் செய்திகளில் அடிபட்ட தெலங்கானா மாநிலம் கம்மம் மாமில்லாகூடத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை கௌதமி, தனது ஆசிரியர் பணியை ராஜினாமா செய்வதாக அதிரடியாக அறிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். தனியார் கல்வி நிறுவனங்களில் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி கடந்த 6 மாதங்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த இவர், சமீபத்தில்தான் மீண்டும் பணிக்குத் திரும்பியிருந்தார். இந்நிலையில், உடன் பணிபுரியும் சக ஊழியர்களின் கேலி கிண்டல்கள் மற்றும் மன ரீதியான துன்புறுத்தல்களை இனிமேலும் தாங்க முடியாது என்பதாலேயே இந்தத் முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ఇన్స్టా రీల్స్ వివాదం.. టీచర్ సంచలన నిర్ణయం!
ఇన్స్టాగ్రామ్ రీల్స్ వివాదంతో వార్తల్లో నిలిచిన ఖమ్మం మామిళ్లగూడెం ప్రభుత్వ పాఠశాల టీచర్ గౌతమి ఉద్యోగానికి రాజీనామా చేస్తున్నట్లు ప్రకటించారు.
ప్రైవేట్ విద్యాసంస్థల అడ్మిషన్ల ప్రమోషన్ వ్యవహారంలో 6 నెలల సస్పెన్షన్ తర్వాత ఇటీవలే… pic.twitter.com/iUmS5tf1Ds— RTV (@RTVnewsnetwork) August 3, 2026
தனக்கு எதிராக எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் தனக்கு ஆறாத மனவேதனையை அளித்ததாகவும், தான் சந்தித்த பலதரப்பட்ட சூழ்நிலைகள் தன்னை மனதளவில் பெரிதும் பாதித்துள்ளதாகவும் அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுத் தெரிவித்துள்ளார். ரீல்ஸ் விவகாரத்தைத் தொடர்ந்து பணிக்குத் திரும்பிய சில நாட்களிலேயே, மன உளைச்சல் காரணமாக ஓர் அரசுப் பள்ளி ஆசிரியை தனது பணியை ராஜினாமா செய்துள்ள இச்சம்பவம் கல்வித்துறை மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
