லிட்டில் ஜான் படத்தில் ஜோதிகாவுடன் நடித்த ஹாலிவுட் நடிகரின், வைரலாகும் தற்போதைய புகைப்படம்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

லிட்டில் ஜான் படத்தில் ஜோதிகாவுடன் நடித்த ஹாலிவுட் நடிகரின், வைரலாகும் தற்போதைய புகைப்படம்…

Published

on

பென்ட்லி மிட்சம் ஒரு அமெரிக்க நடிகர், இவர் தமிழில் லிட்டில் ஜான் படத்தில் நடித்துள்ளார். 2001 ஆம் ஆண்டு பிரபல நடிகை ஜோதிகாவுடன் இணைந்து ஹாலிவுட் நடிகர் பெண்டலி மிட்சம் நடித்த ஃபேண்டசி திரில்லர் படம் தான் லிட்டில் ஜான். இந்த படம் குழந்தைகளிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

ஒரு புகைப்படக் கலைஞர் கோவிலில் புகைப்படம் எடுக்கும் போது அங்குள்ள அம்மனின் மூக்குத்தி தொலைந்து விடுகிறது. அதை புகைப்படம் எடுத்த நபர் தான் திருடி விட்டார் என போலீஸ் துரத்துகிறது. அப்போது பிரபல சாமியார் ஒருவரிடம் உதவி கேட்க அவர் போடும் மந்திரத்தால் ஹீரோ எரும்பு சைஸில் மாறிவிடுகிறார். அதன் பிறகு அந்த மோதிரத்தை கண்டுபிடித்தாரா, எப்படி மீண்டும் வாலிபராக மாறுகிறார் என்பதே இந்த படத்தின் கதை.

Advertisement

இன்றும் இந்த படத்தை டிவியில் போட்டால் அதை பார்க்க தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. அந்த படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் பெண்டலி மிட்சம் என்பரின் தற்போதைய புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவான இந்த படம் குழந்தைகள் மற்றும் குடும்ப ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல் இப்படி ஒரு கதையை தமிழில் எடுக்க முடியுமா என்பதை சாதித்துக் காட்டிய படம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in