“அமெரிக்காவில் பல் பிடுங்க ரூ.2.37 லட்சமா..?” டாக்டர் பில் பார்த்து ஆடிப்போன NRI.. இதைவிட இந்தியாவுக்குத் தரை டிக்கெட் சீப் எனப் புலம்பல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அமெரிக்காவில் பல் பிடுங்க ரூ.2.37 லட்சமா..?” டாக்டர் பில் பார்த்து ஆடிப்போன NRI.. இதைவிட இந்தியாவுக்குத் தரை டிக்கெட் சீப் எனப் புலம்பல்..!!

Published

on

அமெரிக்காவில் சென்று பணிபுரிந்து டாலரில் சம்பாதிப்பது பலரின் கனவாக இருக்கும் நிலையில், அதற்குப் பின்னால் உள்ள மருத்துவச் செலவுகளின் கசப்பான உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார் நிதின் மல்ஹோத்ரா என்ற என்.ஆர்.ஐ.. கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வரும் இவர், அங்குள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களின் வாழ்க்கை முறை குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து வீடியோ பதிவிட்டு வருகிறார். சமீபத்தில், அவர் ஒரு சாதாரண பல் சிகிச்சைக்காக அமெரிக்க பல் மருத்துவரிடம் சென்றபோது அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவக் கட்டண பில்லைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

நிதின் தனக்கு இருந்த ஒரு பல்லை பிடுங்குவதற்காக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அது ஒரு சாதாரண சிகிச்சை என்பதால் செலவு குறைவாகவே இருக்கும் என்றும், அவர்களிடம் மருத்துவக் காப்பீடு இருக்கும் வரை பிரச்சனை இருக்காது என்றும் அவர் கருதியுள்ளார். ஆனால், ஆக்டிவ் ஹெல்த் இன்சூரன்ஸ் இருந்தபோதிலும், ஒரே ஒரு பல்லை பிடுங்குவதற்கு பல் மருத்துவர் அவருக்கு வழங்கிய உத்தேசக் கட்டணம் 2,500 டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.2.37 லட்சம். இந்த அதிர்ச்சி அனுபவத்தைப் பகிர்ந்த நிதின், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்கொள்ளும் எவரும் பேசாத மறைமுகச் செலவு இதுதான் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

https://www.instagram.com/reel/DcuYXYMseNe/?utm_source=ig_web_button_share_sheet

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, அமெரிக்காவின் மருத்துவச் செலவுகள் குறித்து நெட்டிசன்களிடையே பெரிய விவாதம் எழுந்துள்ளது. அமெரிக்காவில் வாழும் பலரும் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, “சம்பாதிப்பதற்கு அமெரிக்கா நல்லதுதான்; ஆனால் மருத்துவ சிகிச்சைகளுக்கு நம் இந்தியாதான் மிகச் சிறந்தது” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், ஒருவர் தான் ரூட் கெனால் சிகிச்சை செய்ய அமெரிக்காவில் 3,500 டாலர் கேட்டதால், இந்தியா வந்து 100 டாலருக்குள் ஒரே நாளில் சிகிச்சையை முடித்துக் கொண்டதாகக் கூறியுள்ளார். சிலர் அமெரிக்காவில் இதுபோன்ற செலவுகளைத் தவிர்க்க மெக்சிகோ சென்று சிகிச்சை பெறுவது சிறந்தது என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in