“தயவுசெஞ்சு காப்பாத்துங்க, கொன்னுடுவாங்க..!” பிரசவ வார்டில் கதறிய கர்ப்பிணி பெண்ணுக்கு 10 நிமிடத்தில் நேர்ந்த கொடூரம்.. மருத்துவர் செய்த துரோகம்… மருத்துவமனையில் நடந்த பயங்கரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“தயவுசெஞ்சு காப்பாத்துங்க, கொன்னுடுவாங்க..!” பிரசவ வார்டில் கதறிய கர்ப்பிணி பெண்ணுக்கு 10 நிமிடத்தில் நேர்ந்த கொடூரம்.. மருத்துவர் செய்த துரோகம்… மருத்துவமனையில் நடந்த பயங்கரம்..!!

Published

on

பிரசவத்திற்காக சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கல்பனா மிஸ்ரா என்ற கர்ப்பிணிப் பெண், முறையான சிகிச்சையின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரசவ வலியால் துடித்த கல்பனா, “தயவுசெய்து என்னை காப்பாற்றுங்கள், இவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள்” என்று கதறிய சில நிமிடங்களிலேயே உயிரிழந்துள்ளார். கல்பனாவின் நிலைமை மோசமடைந்த போது, அங்கிருந்த மருத்துவர் ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும், பணத்தைக் கொடுக்க குடும்பத்தினரால் இயலாததால் மருத்துவருக்குப் பதிலாக ஒரு நர்ஸே ஆபரேஷன் செய்ததே இந்த மரணத்திற்குக் காரணம் என்றும் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருமணத்திற்காக ரூ.15 லட்சம் மதிப்பிலான நிலத்தை விற்றுத் திருமணம் செய்து வைக்கப்பட்ட தனது ஒரே மகளுக்கு நேர்ந்த இந்த அவலத்திற்கு நீதி கேட்டு அவரது தந்தை கதறுகிறார். மருத்துவமனைக்குள் கல்பனா மிகக் கொடூரமாக நடத்தப்பட்டதாகக் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாக இதுவரை இரண்டு நர்ஸ்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், குடும்பத்தினரால் நேரடியாகக் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் மீது இதுவரை எந்தவொரு சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in