இளைஞர்களே குட் நியூஸ்..! மின் வாரியத்தில் 8000 காலிப் பணியிடங்கள்.. TNPSC மூலம் அதிரடியாக நிரப்பத் தமிழக அரசு அனுமதி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இளைஞர்களே குட் நியூஸ்..! மின் வாரியத்தில் 8000 காலிப் பணியிடங்கள்.. TNPSC மூலம் அதிரடியாக நிரப்பத் தமிழக அரசு அனுமதி..!!

Published

on

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 8,000 கள உதவியாளர் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலமாக நேரடி நியமன முறையில் நிரப்புவதற்குத் தமிழக அரசு அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

மின் வாரியத்தில் காலியாக உள்ள இந்த இடங்களை விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம் மற்றும் மின் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் தமிழக அரசுக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். அக்கடிதத்தைப் பரிசீலித்து அரசு தற்போது இந்த அனுமதி ஆணையைப் பிறப்பித்துள்ளது.

Advertisement

இந்த நியமனங்கள் TNPSC மூலம் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட உள்ளன. அதன்படி, முதற்கட்டமாக 2027ஆம் ஆண்டில் 5,000 பணியிடங்களும், இரண்டாம் கட்டமாக 2028ஆம் ஆண்டில் மீதமுள்ள 3,000 பணியிடங்களும் நிரப்பப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in