LATEST NEWS
“ஏய் இருட்டாயிட்டு இருக்குப்பா… சீக்கிரம் லைட்ட போடுங்க..” பயிற்சி ஆட்டத்தின் போது பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் செய்த ஜாலியான கலாட்டா… சிரிப்பலையில் சோஷியல் மீடியா… ரசிகர்களைக் கவர்ந்த வைரல் வீடியோ..!!
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் புதன்கிழமை (செப்டம்பர் 9) தொடங்க உள்ள நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டனும் நட்சத்திர பேட்டருமான பாபர் அசாம் மைதானத்தின் இருண்ட சூழ்நிலையைக் கண்டு நகைச்சுவையாகப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் மிக முக்கியமான கடைசி போட்டிக்கு முன்னதாக, பாபர் அசாமின் இந்த ஜாலியான பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வீடியோவில், பாபர் அசாம் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்வதற்காகத் தனது கிரிக்கெட் கிட்டுகளுடன் பெவிலியனை விட்டு வெளியே நடந்து வருகிறார். ஆனால், வெளியே வந்ததும் மேகமூட்டமான வானிலை காரணமாக மைதானம் மிகவும் இருட்டாக இருப்பதைக் கவனிக்கிறார். உடனே பஞ்சாபி மொழியில், “ஒய், ஹனேரா பை ரஹா ஏ, லைட்டன் சலாவோ!” அதாவது ஏய், இருட்டாயிட்டு இருக்கு, லைட்டையெல்லாம் போடுங்க! என்று நகைச்சுவையாகக் கூறுகிறார். ஒரு முக்கியமான டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நடந்த இந்தச் சம்பவம் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது.
போட்டியின் போது வானிலை எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் கவலை அடைந்துள்ள நிலையில், முதல் நாளில் மழைக்கான வாய்ப்பு மிகக் குறைவு என்று புதிய வானிலை அறிக்கை தெரிவிக்கிறது. புதன்கிழமை அன்று அவ்வப்போது வெயிலும், மேகமூட்டமான சூழலும் நிலவும் என்றும், மழை பெய்யக் குறைந்த அளவே வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் (Met Office) கணித்துள்ளது.
