அசிங்கமா ஆபாசமா நடிச்சி…! தமிழக வரலாற்றிலேயே “தரங்கெட்ட முதலமைச்சர்” என்றால் அது விஜய்தான்… கடுமையாக சாடிய முரசொலி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அசிங்கமா ஆபாசமா நடிச்சி…! தமிழக வரலாற்றிலேயே “தரங்கெட்ட முதலமைச்சர்” என்றால் அது விஜய்தான்… கடுமையாக சாடிய முரசொலி..!!

Published

on

தமிழக முதலமைச்சர் விஜய்யை விமர்சித்து ‘முரசொலி’ நாளிதழின் தலையங்கத்தில் மிகக் கடுமையான சொற்கள் பயன்படுத்தப்பட்டு விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. “தமிழ்நாட்டு வரலாற்றில் தரங்கெட்ட முதலமைச்சர் என்றால் அது விஜய்தான்” என்று முரசொலி சாடியுள்ளது. கோட்டையை ஒரு அசிங்கத்தின் கையில் கொடுத்துவிட்டு தமிழ்நாடு தற்போது அவமானப்பட்டு நிற்பதாக அந்தத் தலையங்கப் பகுதியில் மிகத் தீவிரமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அசிங்கமான படங்களில் நடித்து, அருவருப்பான காட்சிகளில் தோன்றி, ஆபாசத்தையே மூலதனமாக்கி ஹீரோவானவர் விஜய் என்று அந்த விமர்சனம் நீள்கிறது . சினிமா திரையில் எதை மூலதனமாக்கினாரோ அதையே தற்போது அவர் அரசியலிலும் அரங்கேற்றி வருவதாக முரசொலி நாளிதழ் சாடியுள்ளது .

Advertisement

“அவரவர் புத்தி அவரவர் பேச்சில் தெரியும் என்பார்கள். அதைத்தான் ஒவ்வொரு நாளும் மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார்” என்று முதலமைச்சர் விஜய்யின் அரசியல் பேச்சுகளைக் குறிப்பிட்டு முரசொலி தலையங்கம் இறுதிப் பக்கங்களில் கடுமையாக விவரித்துள்ளது . தமிழக அரசியல் களத்தில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே எழுந்துள்ள இந்த வார்த்தைப் போர் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .


Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in