CINEMA
“என்னை யாரும் திட்டாதீங்கப்பா… நான் டைரக்டராக காரணம் இதுதான்.. மேடையில் ஜேசன் சஞ்சய் சொன்ன அந்த ஒரு வார்த்தை…!!
நடிகர் விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து முடிவுக்கு வந்ததாகக் கூறப்படும் நிலையில், மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் அக்டோபர் 2ஆம் தேதி ரிலீஸாகவுள்ள ‘சிக்மா’ படத்தின் பிரமோஷன் பணிகள் நடந்து வருகின்றன. பல பேட்டிகளில் கலந்து கொண்டு வரும் ஜேசன் சஞ்சய், தனது தந்தை, தாய் மற்றும் சகோதரி பற்றிய பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார். அம்மாவுக்கு இப்படி நடந்துவிட்டதால் அப்பாவிடம் பேசுவதை அவர் நிறுத்திவிட்டதாகவும், தாய்க்கு ஆதரவாக இருந்துதான் ஒரு நல்ல மகன் என நிரூபித்துக் கொண்டிருக்கிறார் என்றும் தாய்மார்கள் பேசி வருகிறார்கள்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மேடையேறி பேசிய ஜேசன் சஞ்சய், “இந்த நேரத்தில் என் குடும்பத்திற்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்” என்றதும் அரங்கமே அதிர்ந்துள்ளது. சில நிமிடங்கள் ஜேசனை பேசவிடாமல் அரங்கில் இருந்தவர்கள் “விஜய், விஜய்” என்று மகிழ்ச்சியுடன் கரகோஷமிட்டனர். இதைப் பார்த்த ஜேசன் தம்ஸ்அப் காட்டினார். இதன்மூலம் அப்பா மீது அவருக்கு கோபம் இல்லை என்று நிரூபித்துவிட்டார் என்ற கருத்துக்களும் பரவி வருகின்றன.
மேலும், நான் இயக்குநராகப் போகிறேன் என்பதை முதன்முதலில் அம்மாவிடம் தான் சொன்னேன் என்று ஜேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, எந்த படம் உங்களை பயங்கரமாக இன்ஸ்பையர் செய்து இயக்குநராக வைத்தது என்ற கேள்விக்கு, அப்பா படம் தான் என்று சொல்வார் என அங்கிருந்தவர்கள் நினைத்தனர். ஆனால் அதை புரிந்து கொண்ட ஜேசன், “என்னை யாரும் திட்டாதீங்க, பிரேசிலிய படமான ‘சிட்டி ஆஃப் காட்’ படம் தான் நான் இயக்குநராக காரணமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
