LATEST NEWS
குஷியோ குஷி..! பயிர்க்கடன் தள்ளுபடி.. விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!
தமிழக கூட்டுறவுத் துறை சங்கங்களின் பதிவாளர் அலுவலகம், பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் பகுதி தள்ளுபடி பெற்ற விவசாயிகளிடம் எஞ்சிய நிலுவைத் தொகையை வசூலிக்கக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக எழுந்த புகார்களை அடுத்து அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி, பயிர்க்கடன் நிலுவை தொடர்பான அனைத்து வகையான வசூல் நடவடிக்கைகளையும் மறு உத்தரவு வரும் வரை உடனடியாகத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், தங்களது பயிர்க்கடனை எவ்வித நிலுவையுமின்றி முழுமையாகத் திருப்பிச் செலுத்தியுள்ள விவசாயிகளுக்கு, தற்போதைய பருவ சாகுபடிக்கு உதவும் வகையில் வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் புதிய பயிர்க்கடன்களை வழங்கிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் இந்தத் தற்காலிக தடை உத்தரவு, தள்ளுபடி அறிவிப்புக்கு பின்பும் வங்கிகளின் கெடுபிடிகளால் அவதிப்பட்டு வந்த தமிழக விவசாயிகளுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
