LATEST NEWS
“மகிழ்ச்சிக்காக அவ்வப்போது போதைப்பொருள் பயன்படுத்துவது தப்பில்லை..?” முதல்வர் விஜய் பேச்சுக்கு திவ்யா சத்யராஜ் கடும் கண்டனம்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது வழங்கும் விழாவில் தவெக தலைவர் விஜய் பேசிய கருத்துகள், தற்போது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இவ்விழாவில் மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் விஜய் பேசியதாக திமுக நிர்வாகியும், பிரபல நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா சத்யராஜ் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
மாணவர்களிடம் போதைப்பொருட்களை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது என்றுதான் இதுவரை பல முதலமைச்சர்கள் அறிவுரை கூறி நாம் பார்த்திருக்கிறோம் என்று திவ்யா சத்யராஜ் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக மகிழ்ச்சிக்காக அவ்வப்போது போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை என்ற தொனியில் அறிவுரை கூறும் ஒரு தலைவரை இதுவரை பார்த்ததில்லை என்றும், இதுதான் தவெக காட்டப்போகும் மாற்றமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜய்யின் இந்த பேச்சு மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் விதத்தில் அமைந்துள்ளதாக திமுக மற்றும் அதன் கூட்டணி தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். அதேவேளையில், விஜய்யின் பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர் போதைப்பொருள் ஒழிப்பு குறித்தே பேசினார் என்றும் தவெக தரப்பினர் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
