LATEST NEWS
“டிரம்ப் தோற்றதை நள்ளிரவில் கொண்டாடிய ஈரான்..” நடுரோட்டில் எரிக்கப்பட்ட நெதன்யாகுவின் ராட்சத பதாகைகள்.. பெரும் பரபரப்பு..!!
அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகளில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்ததை அடுத்து, ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் அரசு ஆதரவாளர்கள் உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கொள்கைகளுக்குத் தங்களது கடுமையான எதிர்ப்பைக் காட்டும் வகையில், தெஹ்ரானின் புகழ்பெற்ற இஸ்லாமியப் புரட்சி சதுக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரின் ராட்சத உருவப் பதாகைகளை மக்கள் தீ வைத்து எரித்தனர். அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள மோதல் போக்கு மற்றும் எரிபொருள் விலை உயர்வால் பொதுமக்களிடையே நிலவிய அதிருப்தியே குடியரசுக் கட்சியின் இந்தத் தோல்விக்குக் காரணம் என்று ஈரான் அதிகாரிகள் வெளிப்படையாக வரவேற்றுப் பேசியுள்ளனர்.
மறுபுறம், இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா மொஜ்தபா கமேனி, அமெரிக்காவில் ஏற்படும் இத்தகைய அரசியல் மாற்றங்களால் தெஹ்ரான் மீதான வாஷிங்டனின் ஒட்டுமொத்த வெளியுறவுக் கொள்கையில் எந்தவொரு பெரிய மாற்றமும் தற்போதைக்கு ஏற்பட்டுவிடாது என்று தெளிவுபடுத்தியுள்ளார். மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றமான மற்றும் போர்ச் சூழல் நிலவி வருவதால், ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகளோ அல்லது ராணுவ நடவடிக்கைக் குறித்த அச்சுறுத்தல்களோ தற்போதைக்கு முழுமையாக விலகிவிடாது என்று சர்வதேச அரசியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
