“ஆஃபீசர்ஸ் இருக்கப்போ இவர் எதுக்கு?” லாரிகளை மறித்து தவெக எம்.எல்.ஏ செய்த காரியம்..! மீண்டும் வெடித்த ரீல்ஸ் சர்ச்சை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஆஃபீசர்ஸ் இருக்கப்போ இவர் எதுக்கு?” லாரிகளை மறித்து தவெக எம்.எல்.ஏ செய்த காரியம்..! மீண்டும் வெடித்த ரீல்ஸ் சர்ச்சை..!!

Published

on

விருதுநகர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரான தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பி. செல்வம், தனது பகுதியில் கனிமவளங்கள் ஏற்றிச் சென்ற லாரிகளை மறித்து ஆய்வு நடத்தியுள்ளார். அனுமதிச் சீட்டு மற்றும் பாரம் ஏற்றப்பட்ட அளவுகள் குறித்து ஓட்டுநர்களிடம் கேள்வி எழுப்பிய அவர், அது தொடர்பான காட்சிகளை வீடியோவாகப் பதிவிட்டுச் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். மேலும், கனிமவளக் குவாரி அமைவிடத்திற்கே நேரில் சென்று பார்வையிட்டதுடன், இது குறித்துத் துறை சார்ந்த அமைச்சர் டி. பிரபுவிடம் தொலைபேசியில் பேசியதையும் வீடியோவில் இணைத்துள்ளார்.

முன்னதாக தனியார் பேருந்து ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த விவகாரத்திலும் இவர் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளும் அமைச்சரும் இருக்கும் நிலையில், சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் களஆய்வு செய்து அதை வீடியோவாகப் பதிவிட்டு விளம்பரம் தேடுவது தேவையா என்ற கேள்விகளைச் சிலர் எழுப்பி வருகின்றனர். விளம்பர நோக்கில் மட்டுமே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

இருப்பினும், மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளில் நேரடியாகக் தலையிட்டு நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ செல்வத்தின் ஆதரவாளர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இந்த ரீல்ஸ் வீடியோ விவகாரம் தொடர்பாகத் தவெக தலைமை அல்லது மாவட்ட நிர்வாகம் சார்பில் அடுத்தகட்ட விளக்கங்கள் எதுவும் அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in