LATEST NEWS
“House Wife இருக்கலாம்கிறப்ப House Husband ஏன் இருக்கக் கூடாது?” மதுரை ஐகோர்ட்டின் அதிரடி தீர்ப்பு..?
“ஹவுஸ் வொய்ஃப்” இருக்க முடியும் என்றால், “ஹவுஸ் ஹஸ்பண்ட்”களும் இருக்க முடியும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மிக முக்கிய முற்போக்கான கருத்து ஒன்றை வழங்கியுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்த தம்பதி விவாகரத்து கோரிய வழக்கினை விசாரித்த நீதிபதிகள், சமூகத்திலும் குடும்ப அமைப்பிலும் பாலின சமத்துவம் பேணப்பட வேண்டியதன் அவசியத்தை இதன் மூலம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பெண்கள் தங்கள் வேலைவாய்ப்புகளுக்குத் திருமணம் ஒரு தடையாக இருக்கும் என உணர்வதால், தற்காலத்தில் திருமணம் செய்யாத பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து நீதிமன்றம் தனது கவலையைப் பதிவு செய்துள்ளது. இந்த நிலை மாற வேண்டுமானால் கணவர்களும் வீட்டுப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும் என்றும், “வீட்டு பராமரிப்பாளர்” என்ற சொல் இரு பாலருக்கும் பொதுவானது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
காலங்காலமாக ஆண்களே பொருளீட்ட வேண்டும், பெண்கள் மட்டுமே வீட்டைப் பராமரிக்க வேண்டும் என்ற சமூகக் கட்டமைப்பை உடைக்க வேண்டிய நேரம் இது என நீதிமன்றம் கூறியுள்ளது. மனைவி வீட்டுப் பொறுப்புகளைக் கவனிப்பது பொருளாதார ரீதியாக மதிப்புமிக்கது என்றும், ஆண்கள் வீட்டைப் பராமரிக்கும் இந்த புதிய வழக்கம் நடைமுறைக்கு வந்தால் அது திருமணம் மற்றும் குடும்ப அமைப்பைப் பாதுகாக்க பெரிதும் உதவும் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
