LATEST NEWS
“நான் கலெக்டரோட பையன்டா..!” மது போதையில் நடுரோட்டில் போலீஸ் செய்த காரியத்தை பாருங்க.. நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூரில் காவல்துறை காவலர் ஒருவர் முழு போதையில் நடுரோட்டில் விழுந்து கிடந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதை தலைக்கேறிய நிலையில், அந்த காவலர் நடுரோட்டில் உருண்டு பிரண்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார். மேலும், அவர் அங்கிருந்த பொதுமக்களிடம் “நான் ஒரு மாவட்ட ஆட்சியரின் மகன்” என்று போதையில் கத்தியுள்ளார்.
இதனைப் பார்த்த அங்கிருந்த உள்ளூர் மக்கள், அவரது போதையைத் தெளிவிப்பதற்காக அவர் மீது தண்ணீரை ஊற்றியுள்ளனர். இந்த ரகளையின் போது அவரது காவல்துறை சீருடையும் கிழிந்து கந்தலாகியுள்ளது. விசாரணையில், போதையில் சுருண்டு கிடந்த அந்த காவலரின் பெயர் உமா சங்கர் சிங் என்பதும், அவர் ஜான்பூர் போலீஸ் லைன்ஸில் பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் தீயாகப் பரவி வரும் நிலையில், காவல்துறை அதிகாரிகளின் நடத்தை குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.
