CRIME
“Please Help Me..” அண்ணனுக்கு வந்த ஒரே ஒரு மெசேஜ்.. மாந்தோப்பில் அத்துமீறிய வாலிபர்கள்.. 26 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, கடன் தொகையைத் திரும்பக் கேட்கச் சென்ற 26 வயது இளம்பெண்ணிடம் காட்டுப்பகுதியில் அத்துமீறி தவறாக நடக்க முயன்ற இரண்டு வாலிபர்களைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சின்ன பர்கூர் பகுதியைச் சேர்ந்த சுவாதிலட்சுமி என்ற அந்தப் பெண், மங்கலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (29) என்பவரிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து லட்சம் ரூபாய் கடன் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. கொடுத்த பணத்தைத் திரும்பப் பெறுவதற்காக, நேற்று முன்தினம் மாலை சந்தூர் அருகே உள்ள சோலைவனம் பகுதிக்கு வெங்கடேஷைச் சந்திக்க சுவாதிலட்சுமி சென்றுள்ளார். அப்போது அங்குத் தனது நண்பர் இளங்கோவுடன் (33) மாந்தோப்பில் மது அருந்திக் கொண்டிருந்த வெங்கடேஷ், சுவாதிலட்சுமியை இருசக்கர வாகனத்தில் அந்தத் தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மூவரும் மது அருந்தியதாகக் கூறப்படும் நிலையில், போதை தலைக்கேறிய இளங்கோ, சுவாதிலட்சுமியிடம் பலவந்தமாகத் தவறாக நடக்க முயன்றுள்ளார்.
அபாயகரமான இச்சூழ்நிலையில் சுதாரித்துக் கொண்ட சுவாதிலட்சுமி, உடனடியாகத் தனது அண்ணனுக்குத் தனது கைபேசி மூலம் “தயவுசெய்து எனக்கு உதவுங்கள்” என்று அவசர மெசேஜ் அனுப்பியதோடு, தான் இருக்கும் அடர்ந்த காட்டுப்பகுதியின் ‘நேரலை இருப்பிடத்தையும் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது அண்ணன் உடனடியாகப் பர்கூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, புகாரின் தீவிரத்தை உணர்ந்த பர்கூர் டி.எஸ்.பி தனசேகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் அந்த லைவ் லொகேஷனைப் பின்தொடர்ந்து அதிரடியாகக் களமிறங்கினர். மெசேஜ் வந்த ஒரே மணி நேரத்திற்குள் மாந்தோப்பைச் சூழ்ந்த போலீசார், அங்கு ஆபத்தில் சிக்கியிருந்த சுவாதிலட்சுமியைப் பத்திரமாக மீட்டனர். பின்னர் அவரை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததில், அவருக்கு எவ்வித பாலியல் காயங்களோ அல்லது தொந்தரவுகளோ ஏற்படவில்லை என்பது உறுதியானது. இதையடுத்துப் போச்சம்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து, வெங்கடேஷ் மற்றும் இளங்கோ ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
