LATEST NEWS
“நெஞ்சே நடுங்குது… 25 வயது துறவியின் தற்கொலை வழக்கு.. வெளியானது திக் திக் சிசிடிவி.. உறையவைத்த வீடியோ..!!
பிரபல ஆன்மீக குரு சாந்த் பிரேமானந்த் மகாராஜின் சீடரான 25 வயது வாலிபர், கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் மதுரா-பிருந்தாவனத்தில் அரங்கேறியுள்ளது. ராசிக் துலாரி சரண் என்ற அந்த வாலிபர், சுமார் 40 அடி உயரத்தில் இருந்து கீழே குதிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அவர் திடீரென சாலையில் விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், அவரை மீட்டு படுகாயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், தீவிர சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மதுரா காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, இச்சம்பவம் செப்டம்பர் 25ஆம் தேதி அதிகாலையில் நடந்துள்ளது. உடற்கூராய்வுக்குப் பிறகு, யமுனை நதிக்கரையில் அவரது குடும்பத்தினரால் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு, தம்பி மனிஷ் என்பவரால் உடல் தகனம் செய்யப்பட்டது. ஆன்மீகப் பாதையில் இருந்த இந்த இளம் சீடர், எந்தக் காரணத்திற்காக இந்த தீவிரமான முடிவை எடுத்தார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
