LATEST NEWS
“வீட்ல இறக்கி விடுறேன் வாங்க…” நம்பி ஏறிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. காரில் கதறித் துடித்த பெண்… பதறியடித்துக் காரை வழியிலேயே விட்டுட்டு ஓடிய கும்பல்.. நள்ளிரவில் நடந்த பகீர் சம்பவம்..!!
செப்டம்பர் 25 அன்று, ஒரு பெண் தன் நண்பர் அபிஷேக் யாதவ் உடன் சலேம்பூரிலிருந்து தியோரியாவில் உள்ள தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். சோனூகாட் பகுதியில் அபிஷேக் அப்பெண்ணை இறக்கிவிட்டு சலேம்பூர் திரும்பினார். அங்கிருந்து வீட்டிற்குச் செல்ல வாகனம் கிடைக்காமல் அப்பெண் காத்திருந்தபோது, அவருக்கு ஏற்கனவே அறிமுகமான விகாஸ் யாதவ் என்பவர் அங்கு வந்து, வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி தன் காரில் ஏற்றியுள்ளார்.
ஆனால், காரில் ஏறிய பிறகு அவர் அப்பெண்ணை வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்வதை உணர்ந்த பெண், விகாஸ் யாதவின் செயலை எதிர்த்துச் சத்தம்போட்டு அலறத் தொடங்கினார். இதனால் பதற்றமடைந்த விகாஸ் யாதவ் மற்றும் அவருடன் இருந்த தோழர்கள், அப்பெண்ணை ரோட்டிலேயே காரில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோத்வாலி காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காரைக் கைப்பற்றிப் பெண்ணைப் பாதுகாப்பாகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும், அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தலைமறைவாக உள்ள விகாஸ் யாதவ் மற்றும் அவரது கூட்டாளிகளைப் பிடிக்கக் கோத்வாலி போலீஸார், SOG மற்றும் சர்வைலன்ஸ் குழுக்கள் முடுக்கப்பட்டுள்ளதாக தியோரியா நகரக் காவல் அதிகாரி சஞ்சய் குமார் ரெட்டி தெரிவித்துள்ளார்.
