LATEST NEWS
“யாரும் கேக்க மாட்டாங்கனு துணிச்சலா..?” ஓடும் ரயிலில் கூலாக சரக்கடித்த பயணி… காலியான பாட்டிலை தண்டவாளத்தில் தூக்கி வீசி எறிந்த கொடூரம்..! வீடியோவைப் பார்த்து கொந்தளித்த நெட்டிசன்கள்..!!
மும்பை விரார் ரயில் நிலையத்தின் 3-வது நடைமேடையில் இருந்து காலை 11:50 மணிக்குச் சர்ச்கேட் நோக்கிப் புறப்பட்ட லோக்கல் ரயிலில், பயணி ஒருவர் பகிரங்கமாக மது அருந்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ரயிலில் பயணித்த சக பயணி ஒருவர், அந்த நபர் கண்ணாடி பாட்டிலில் இருந்து மது அருந்துவதையும், மதுவைக் குடித்து முடித்த பின்னர் அந்தக் காலி பாட்டிலை அசால்ட்டாக ஓடும் ரயிலில் இருந்து தண்டவாளத்தை நோக்கி வீசி எறிவதையும் தனது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
பொதுப்போக்குவரத்தான லோக்கல் ரயில்களிலும் ரயில்வே வளாகங்களிலும் இதுபோன்ற சட்டவிரோத மது அருந்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பயணிகள், குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவைக் கண்டு கொதித்தெழுந்த நெட்டிசன்களும் ரயில் பயணிகளும், சம்பந்தப்பட்ட நபரைக் கண்டறிந்து ரயில்வே பாதுகாப்புப் படை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
