“எனக்கு ரொம்ப பயமா இருக்கு…” குடும்பத்தினரிடம் கதறிய சில மணி நேரத்தில் நேர்ந்த பெருந்துயரம்..! ரயில் பயணத்தில் இளம்பெண்ணுக்கு என்ன ஆனது..? அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எனக்கு ரொம்ப பயமா இருக்கு…” குடும்பத்தினரிடம் கதறிய சில மணி நேரத்தில் நேர்ந்த பெருந்துயரம்..! ரயில் பயணத்தில் இளம்பெண்ணுக்கு என்ன ஆனது..? அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்..!!

Published

on

அசாமின் கம்ரூப் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண், கவுகாத்தியில் உள்ள கல்லூரியில் படித்துக்கொண்டே நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்துள்ளார். இதற்காக நடனக் குழுவுடன் விசாகப்பட்டினத்திற்குச் சென்ற அவர், அக்டோபர் 10ஆம் தேதி நடைபெறவிருந்த வங்கித் தேர்வுக்காக ஊர் திரும்ப முடிவு செய்தார். தட்கல் முறையில் டிக்கெட் கிடைக்காததால், விசாகப்பட்டினம் ரயில் நிலையத்திற்குச் சென்று விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் அசாம் நோக்கிப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். அக்டோபர் 5ஆம் தேதி நள்ளிரவு ரயிலில் ஏறிய அவர், குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் தொடர்ச்சியாகப் பேசி வந்துள்ளார்.

ரயில் பயணத்தின்போது, பெட்டியில் கூட்டம் அதிகமாக இருப்பதாகவும், தன்னைச் சுற்றி பெரும்பாலும் ஆண்களே இருப்பதால் தனக்கு மிகவும் பயமாக இருப்பதாகவும் அவர் குடும்பத்தினரிடம் கடைசியாகத் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பிறகு அவரது செல்போன் அணைக்கப்பட்டதால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக ரயில்வே போலீசாருக்குப் புகாரளித்தனர். தீவிர தேடுதலுக்குப் பிறகு, அவரது உடைமைகள் ரயிலின் S2 பெட்டியில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியையொட்டிய ரயில் தண்டவாளம் அருகே அவரது உடல் மீட்கப்பட்டது.

Advertisement

இளம்பெண்ணின் மரணத்துக்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை; அவர் ரயிலில் இருந்து தவறி விழுந்தாரா அல்லது வேறு ஏதேனும் குற்றச் சம்பவம் நடந்ததா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ரயிலில் ஏறுவதற்கு முன்பு அவர் ஒருவருடன் இருந்ததாகக் கூறப்படும் தகவல் மற்றும் கடைசியாக அனுப்பிய குறுஞ்செய்தி ஆகியவை முக்கியத் தடயங்களாகக் கருதப்படுகின்றன. பிரேதப் பரிசோதனை மற்றும் தடயவியல் ஆய்வு முடிவுகள் வந்த பிறகே இந்தச் சம்பவத்திற்கான முழுமையான உண்மைகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in