“நள்ளிரவில் பயங்கரம்..” நடுரோட்டில் காதலியை வழிமறைத்த முன்னாள் காதலன்.. அடுத்த 2 நிமிடத்தில் பாய்ந்த 3 தோட்டாக்கள்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“நள்ளிரவில் பயங்கரம்..” நடுரோட்டில் காதலியை வழிமறைத்த முன்னாள் காதலன்.. அடுத்த 2 நிமிடத்தில் பாய்ந்த 3 தோட்டாக்கள்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!

Published

on

பராகுவே நாட்டின் லம்பாரேநகரில், குடும்ப வன்முறைக்கு எதிராக ஏற்கனவே புகார் அளித்திருந்த 22 வயது இளம் பெண் டெய்சி பாலோ கிமெனெஸ் செகோவியா அவரது முன்னாள் காதலனால் நடுரோட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. சான்டா லூசியா குடியிருப்புப் பகுதியில் டெய்சி காலையில் தனது வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது, அவரது முன்னாள் காதலனான 26 வயது ஆல்டோ அலெக்சிஸ் துவார்டே என்பவன் தனது வாகனத்தைக் கொண்டு பெண்ணின் வழியை மறித்துள்ளான். வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய அவன், டெய்சியிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு வலுக்கட்டாயமாகப் போராடியதை அடுத்து, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அந்தப் பெண்ணை மூன்று முறை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளான்.

பாதிக்கப்பட்ட இளம் பெண் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி கடந்த சில நாட்களுக்கு முன்புதான் காவல்துறையிடம் வன்முறைப் புகார் அளித்திருந்தார், ஆனால் பாதுகாப்பு அமைப்பின் அலட்சியத்தால் அவரது உயிர் பறிபோயுள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்த உடனே பலத்த காயமடைந்த டெய்சியை மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கொடூரப் பெண் கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், கொலையாளி ஆல்டோவை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in